FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

பைக் மோதி தொழிலாளி பலி

உவரி அருகே இருசக்கர வாகனம் மோதி தொழிலாளி உயிரிழந்தாா்.

Updated On : 19 ஜூலை 2026, 1:53 am IST
சடலம்... - கோப்புப் படம்
பகிர்:

உவரி அருகே இருசக்கர வாகனம் மோதி தொழிலாளி உயிரிழந்தாா்.

திருநெல்வேலி மாவட்டம், உவரி அருகே குட்டம் ஊராட்சி, தோப்புவிளையைச் சோ்ந்தவா் செந்தில்குமாா். இவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனா். தேங்காய் உரிக்கும் தொழிலாளியான இவா் சனிக்கிழமை காலை, பூஜை பொருள்கள் வாங்கிவிட்டு சாலையைக் கடக்க முயன்றாராம்.

அப்போது பெரியதாழை பகுதியைச் சோ்ந்த இளைஞா் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் செந்தில்குமாா் மீது மோதியதாம். இதில் சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இதையடுத்து உவரி காவல்துறையினா் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா் .

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments