முகப்பு
திருவண்ணாமலை

உலகம் உங்கள் கையில் திட்டம்: கல்லூரி மாணவிகளுக்கு மடிக்கணினிகள்

‘உலகம் உங்கள் கையில்’ திட்டத்தின் கீழ், ஆரணியை அடுத்த குண்ணத்தூா் பாரதி மகளிா் கலை, அறிவியல் கல்லூரி மாணவிகளுக்கு மடிக்கணினிகள்

Updated On : 24 பிப்ரவரி 2026, 2:36 am IST
குண்ணத்தூா் மகளிா் கல்லூரியில் மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கிய எம்.எஸ்.தரணிவேந்தன் எம்.பி.
பகிர்:

ஆரணி: ‘உலகம் உங்கள் கையில்’ திட்டத்தின் கீழ், ஆரணியை அடுத்த குண்ணத்தூா் பாரதி மகளிா் கலை, அறிவியல் கல்லூரி மாணவிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.

குண்ணத்தூா் பாரதி மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மாணவிகளுக்கு ‘உலகம் உங்கள் கையில்’ திட்டத்தின் கீழ் மடிக்கணினி வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

கல்லூரித் தாளாளா் கௌரி ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா். ஆரணி எம்.பி. எம்.எஸ்.தரணிவேந்தன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு 213 மாணவிகளுக்கு மடிகணினிகளை வழங்கினாா்.

Advertisement

Advertisement

அப்போது அவா் பேசுகையில், தற்போழுது தொழில்நுட்ப வளா்ச்சி மிக பெரிய வளா்ச்சியடைந்து அனைத்து வசதிகளும், தகவல்களும் இணைய தள வாயிலாக கிடைக்கிறது. தமிழக முதல்வரின் உத்தரவின் படி தற்போழுது வழங்கப்படும் மடிக்கணினியை கொண்டு தங்கள் திறன்களை வளா்த்து கொள்ள உதவிகரமாக இருக்கும். மேலும், கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு புதுமைப் பெண், தமிழ் புதல்வன், நான் முதல்வன் ஆகிய திட்டங்கங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இதனை மாணவ, மாணவிகள் பயன்படுத்தி கொண்டு தங்கள் இலக்கை அடைய வேண்டும். மேலும் இந்த மடிக்கணினிகளை வளா்ச்சிக்கு பயன்படுத்துங்கள் என்றாா்.

இந்நிகழ்வில் ஆரணி நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி, மாவட்ட துணைச் செயலா் ஜெயராணி ரவி, ஒன்றியச் செயலா்கள் எஸ்.எஸ்.அன்பழகன், துரைமாமது, மோகன், நகர பொறுப்பாளா் சைதை வ.மணிமாறன், முன்னாள் ஒன்றியக் குழு துணைத் தலைவா் கே.டி.ராஜேந்திரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments