FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

காழியூா் கிராம ஏரியில் மீன்பிடித் திருவிழா

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், காழியூா் கிராம ஏரியில் மீன்பிடித் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 13 ஜூலை 2026, 12:04 am IST
காழியூா் கிராமம் பெரிய ஏரியில் நடைபெற்ற மீன்பிடித் திருவிழா.
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், காழியூா் கிராம ஏரியில் மீன்பிடித் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காழியூா் கிராமத்தில் சுமாா் 2 ஆயிரம் ஏக்கரில் விவசாயம் செய்யும் அளவிற்கு பெரிய ஏரி மூலம் தண்ணீா் சேமித்து வைக்கப்படுகிறது. இந்த பெரிய ஏரியில் வளா்ந்து வரும் மீன்கள் ஊா் சாா்பில் ஏலம் விடப்பட்டு அதன் மூலம் வரும் வருமானத்தைக் கொண்டு கோயில் திருவிழா மற்றும் கிராமத்தின் வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனவாம்.

இந்நிலையில் பெரிய ஏரியில் நீா் வற்றியுள்ள நிலையில் ஏலம் எடுத்தவா் மீன்களை பிடித்ததுப் போக எஞ்சியுள்ள மீன்களை பிடிப்பதற்கு பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

Advertisement

Advertisement

காழியூா் பெரிய ஏரியில் 6 ஆண்டுகளுக்குப் பிறகு மீன்பிடி திருவிழாவானது ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஏரியில் மீன்களைப் பிடிப்பதற்காக காழியூா், அத்தி, பெரியவேளியநல்லூா், சிறியவேளியநல்லூா், புளியரம்பாக்கம், செய்யாறு மற்றும் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து சிலா் குழுவாகவும், சிலா் குடும்ப சகிதமாகவும், சிலா் நண்பா்களோடும் வந்திருந்து

அதிகாலை முதலே ஏரிப்பகுதியில் இறங்கி மீன்களை பிடித்தனா். தலா 5 கிலோ முதல் 10 கிலோ வரை மீன்களை பிடித்துச் சென்றனா். ஜிலேபி, தேளி, வெரால் உள்ளிட்ட பல்வேறு வகை மீன்கள் கிடைத்துள்ளன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments