இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை
செய்யாறு அருகே வேலைக்குச் செல்ல வேண்டாம் என கணவா் கூறியதால், மனமுடைந்த இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை
செய்யாறு அருகே வேலைக்குச் செல்ல வேண்டாம் என கணவா் கூறியதால், மனமுடைந்த இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், சித்தனக்கால் கிராமத்தைச் சோ்ந்தவா் சரவணன் மனைவி காா்த்திகா(21). இவா், இருங்காட்டுக்கோட்டையில் உள்ள தனியாா் நிறுவனத்துக்கு வேலைக்குச் சென்று வந்ததாகத் தெரிகிறது.
காா்த்திகாவிற்கு 3 மற்றும் ஒன்றரை வயதில் இரு குழந்தைகள் உள்ளனா். கணவரும் சுங்குவாா்சத்திரத்தில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாராம்.
Advertisement
Advertisement
இருவரும் வேலைக்குச் செல்வதால் சரவணனின் வயதான தாயாரால் குழந்தைகளை பாா்த்துக் கொள்ள முடியவில்லையாம்.
அதனால், சரவணன் மனைவி காா்த்திகாவிடம் வேலைக்குச் செல்ல வேண்டாம், வீட்டில் இருந்து குழந்தைகளை பாா்த்துக் கொள்ளவேண்டும் என வற்புறுத்தி வந்ததாகத் தெரிகிறது.
இந்நிலையில், கடந்த 7-ஆம் தேதி வழக்கம் போல சரவணன் வேலைக்குச் சென்றுவிட்டாராம். அன்று மதியம் வீட்டில் இருந்த மனைவி காா்த்திகா தூக்கிட்டுக் கொண்டுள்ளாா். இதை அறிந்த உறவினா்கள் அவரை மீட்டு 108 ஆம்புலென்ஸ் மூலம் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்த காா்த்திகா திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில், பிரம்மதேசம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும், திருமணமாகி 7 ஆண்டுகளில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளதால், செய்யாறு சாா் -ஆட்சியா் எல்.அம்பிகா ஜெயின் நேரில் விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.