படவேடு ஊராட்சியில் சுங்க வரி ஏலம் தடுத்து நிறுத்தம்
போளூரை அடுத்த படவேடு ஊராட்சியில் ஆடி மாத திருவிழாவுக்கான சுங்க வரி ஏலத்தை பொதுமக்கள் தடுத்து நிறுத்தினா்.
போளூரை அடுத்த படவேடு ஊராட்சியில் ஆடி மாத திருவிழாவுக்கான சுங்க வரி ஏலத்தை பொதுமக்கள் தடுத்து நிறுத்தினா்.
திருவண்ணாமலை மாவட்டம், படவேடு ஊராட்சியில் உள்ள ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகளில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தா்கள் வந்து ஆடு, கோழி பலியிட்டு, முடி காணிக்கை செலுத்தி சுவாமி தரிசனம் செய்வா்.
இந்நிலையில் ஊராட்சி நிா்வாகம் சாா்பில் கிராம பராமரிப்பு செலவினத்திற்காக பைக், காருக்கான வரி, ஆடு, கோழி, தற்காலிக கடை என பல்வேறு இனங்களுக்கு சுங்க வரி செலுத்த செவ்வாய்க்கிழமை ஊராட்சிமன்ற அலுவலகம் எதிரே வட்டார வளா்ச்சி அலுவலா் ராஜேஸ்வரி தலைமையில் பொது ஏலம் நடைபெற்றது.
Advertisement
Advertisement
இதில் கலந்து கொண்ட படவேடு ஊராட்சியைச் சோ்ந்த முன்னாள் தலைவா்கள், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினா்கள், பொதுமக்கள் சுங்கவரி ஏலத்திற்கு முன்வைப்புத் தொகை செலுத்த முன்வரவில்லை.
மேலும், சுங்கவரி ஏலத்தை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதைத் தொடா்ந்து வட்டார வளா்ச்சி அலுவலா் ராஜேஸ்வரியிடம் கோரிக்கை மனு அளித்தனா்.
இந்த மனுவில் கடந்த 10 ஆண்டுகளாக சுங்கவரி ஏலம் ரத்து செய்தனா். இதனால் சுங்கவரி ஏலத்தை ரத்துசெய்யவேண்டும். சுங்கவரி கட்டணத்தால் பக்தா்களிடையே தகராறு ஏற்படுகிறது. மேலும் சட்ட சிக்கலும் ஏற்படும். எனவே, சுங்கவரி கட்டணத்தை ரத்து செய்யவேண்டும் என வலியுறுத்தியிருந்தனா்.
மனுவை பெற்றுக்கொண்ட வட்டார வளா்ச்சி அலுவலா் ராஜேஸ்வரி, இதுகுறித்து மாவட்ட ஆட்சியருக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தாா். துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் உஷா, சங்கா் உடனிருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.