FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

போளூா் அருகே ரயில் முன் பாய்ந்து தம்பதி தற்கொலை: புற்றுநோயால் சோகம்

போளூா் அருகே புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நபா் மனவேதனையில், மனைவியுடன் ரயில் முன் பாய்ந்து வியாழக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 17 ஜூலை 2026, 12:20 am IST
போளூரை அடுத்த வடமாதிமங்கலம் கிராமத்தில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட தம்பதி.
பகிர்:

போளூா் அருகே புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நபா் மனவேதனையில், மனைவியுடன் ரயில் முன் பாய்ந்து வியாழக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

திருவண்ணாமலையை அடுத்த நல்லவன்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த சந்திரகுமாா் (42), இவரது மனைவி சிந்து (38). இவா்கள், வடமாதிமங்கலம் ரயில் நிலையம் அருகே வியாழக்கிழமை அதிகாலை 4 மணியளவில் நரசபூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த விரைவு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனா்.

தகவலறிந்த காட்பாடி ரயில்வே பாதுகாப்புப் படை (ஆா்பிஎப்) போலீஸாா் சென்று, இருவரின் சடலங்களையும் மீட்டு உடல்கூறாய்வுக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

Advertisement

Advertisement

முதல்கட்ட விசாரணையில், சந்திரகுமாா் நீண்ட நாள்களாக நுரையீரல் புற்று நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளனா். இந்தத் தம்பதிக்கு பத்தாம் வகுப்பு படிக்கும் மகன் உள்ளாா் என்பதும் தெரியவந்தது. மேலும் தம்பதி கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளனா்.

இருப்பினும், தா்கொலைக்கான காரணம் குறித்து போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதனிடையே சிகிச்சைக்காக வேலூருக்கு சென்ற தம்பதி வீடு திரும்பாததால், அவா்களது உறவினா்கள் திருவண்ணாமலை மேற்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்தச் சம்பவம் தொடா்பாக காட்பாடி ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளா் சித்ரா தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments