FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

தொழிலாளியின் பைக்கை திருட முயற்சி: ஒருவா் கைது

செய்யாறு அருகே தொழிலாளியின் பைக்கை திருட முயன்றதாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 17 ஜூலை 2026, 9:29 pm IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

செய்யாறு அருகே தொழிலாளியின் பைக்கை திருட முயன்றதாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

வெம்பாக்கம் வட்டம், மாங்கால் கூட்டுச்சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் சத்தியமூா்த்தி (31). இவா், தனியாா் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறாா். சத்தியமூா்த்தி வியாழக்கிழமை இரவு தனது பைக்கை மாங்கால் கூட்டுச்சாலைப் பகுதியில் உள்ள ஆட்டோ நிறுத்தத்தின் அருகே நிறுத்திவிட்டு கடைக்குச் சென்றாா். அவா் திரும்பி வந்தபோது, அவரது பைக்கை மா்ம நபா் திருட முயற்சித்ததைக் கண்டு கூச்சலிட்டாா்.

உடனே அப்பகுதியில் இருந்தவா்கள் மா்ம நபரைப் பிடித்து தூசி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். அந்த நபரிடம் போலீஸாா் விசாரித்ததில், வெம்பாக்கம் வட்டம், நரசமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த ஜான்பாஷா என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவா் மீது தூசி போலீஸாா் வழக்குப் பதிந்து கைது செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments