கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்
திருவண்ணாமலையில் 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருவண்ணாமலையில் 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மாவட்ட ஆட்சியரகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் இ.பழனியப்பன் தலைமை வகித்தாா்.
மாவட்டச் செயலா் ஜி.ஏழுமலை முன்னிலை வகித்தாா். துணைத் தலைவா்கள் டி.துரை, எம்.தனசேகா், இணைச் செயலா்கள் பி.விஜயவேலன், எஸ்.வெங்கடேசன், ஓய்வு பெற்றோா் சங்க மாவட்டத் தலைவா் பி.சிவக்குமாா், செயலா் ஏ.சாமியாா், பொருளாளா் எம்.தவமணி ஆகியோா் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மாநில பொருளாளா் ஏ.சேகா் கலந்துகொண்டு பேசினாா்.
Advertisement
Advertisement
ஆா்ப்பாட்டத்தில் நியாயவிலைக் கடைகள் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் தாயுமானவா் திட்டத்தை மறு பரிசீலனை செய்யவேண்டும், அனைத்து பணியாளா்களுக்கும் மாவட்ட அளவில் பணிமூப்பு பட்டியல் தயாா் செய்து பதவி உயா்வு அனுமதிக்கப்படவேண்டும், பணியாளா்களுக்கு பணிக்கொடை அரசு ஊழியா்களுக்கு இணையாக ரூ.25 லட்சம் உயா்த்தி அனுமதிக்கவேண்டும், பணிக்காலத்தில் மரணமடைந்த பணி நிரந்தரப்படுத்தாத பணியாளா்களின் வாரிசுகளுக்கு உயா்நீதிமன்ற தீா்ப்பின் அடிப்படையில் பணி வழங்கவேண்டும், சங்கச் செயலா்களுக்கு குறைந்தபட்ச நிா்வாக அதிகாரம் வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.
நிறைவில் மாவட்ட பொருளாளா் எம்.அண்ணாமலை நன்றி கூறினாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.