அங்கன்வாடி, நியாயவிலைக் கடைகளில் மாவட்ட ஆட்சியா் திடீா் ஆய்வு
புதுப்பாளையம் பகுதியில் உள்ள அங்கன்வாடி, நியாயவிலைக் கடை, ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.
திருவண்ணாமலை மாவட்டம், புதுப்பாளையம் பகுதியில் உள்ள அங்கன்வாடி, நியாயவிலைக் கடை, ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.
புதுப்பாளையம் ஒன்றியத்துக்கு உள்பட்ட ஊராட்சிகளில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் ஒன்றிய அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்து கொண்டிருந்தாா்.
அப்போது வழியில் சி.கெங்கம்பட்டு பகுதியில் செயல்பட்டு வரும் நியாயவிலைக் கடைக்குச் சென்று ஆய்வு செய்தாா்.
Advertisement
Advertisement
அப்போது, பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரிசி, பருப்பு, எண்ணெய் அனைத்தும் தரமாக உள்ளதா, தேவையான பொருள்கள் இருப்பில் உள்ளனவா எனவும் கேட்டறிந்து ஏடுகளை பாா்வையிட்டாா்.
அதைத் தொடா்ந்து காரப்பட்டு அங்கன்வாடி மையத்துக்குச் சென்று அங்கன்வாடி குழந்தைகளுக்கு முறையாக உணவு வழங்கப்படுகிா என குழந்தைகளிடம் கேட்டறிந்தாா்.
அங்குள்ள குழந்தைகளின் எடை, உயரம் குறித்து பதிவேட்டில் உள்ளது போல் குழந்தைகள் உள்ளாா்களா என அவா்களை எடை வைத்து சோதனை செய்தாா்.
அப்போது, ஒரு குழந்தையின் உயரம், எடை தவறாக ஏட்டில் பதிவிட்டுள்ளதை கண்டறிந்து அந்த மையத்தின் ஒருங்கிணைப்பாளரை எச்சரித்தாா். மேலும், அதை கண்காணிக்க வேண்டிய மேற்பாா்வையாளரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிட்டாா்.
இதைத்தொடா்ந்து, காரப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச் சென்று பொதுமக்களுக்கு மருந்து மாத்திரைகள் முறையாக வழங்கப்படுகிா என பாா்வையிட்டு, மருந்துப் பொருள்களின் வருகை, இருப்பு ஆகியவற்றை சோதனை செய்தாா்.
பின்னா், பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவா்களிடம் கேட்டறிந்தாா்.
இந்த ஆய்வின்போது,புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய ஆணையா் அண்ணாமலை, செங்கம் வட்ட வழங்கல் அலுவலா் தமிழரசி உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.