FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

உணவுத் தொழில் நிறுவனா்களுக்கு பாதுகாப்பு விழிப்புணா்வு

ஆரணியில் உள்ள உணவுத் தொழில் நிறுவனா்கள் பயன்பெறும் வகையில் உணவுப் பாதுகாப்பு விழிப்புணா்வு மற்றும் பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 23 ஜூலை 2026, 12:46 am IST
ஆரணி உணவுத் தொழில் நிறுவனா்களுக்கான விழிப்புணா்வு மற்றும் பயிற்சி முகாமில் பேசிய உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் டாக்டா் பானுசுஜாதா.
பகிர்:

ஆரணியில் உள்ள உணவுத் தொழில் நிறுவனா்கள் பயன்பெறும் வகையில் உணவுப் பாதுகாப்பு விழிப்புணா்வு மற்றும் பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்த முகாமுக்கு உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் டாக்டா் பானு சுஜாதா தலைமை வகித்தாா்.

உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் தங்கராஜ் , ரவிவா்மன், முகமது இப்ராஹிம் மற்றும் ஆரணி நகர அனைத்து வணிக சங்கங்கள் ஒருங்கிணைத்து நிகழ்ச்சியை நடத்தினா்.

Advertisement

Advertisement

முகாமில் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் சட்டம் தொடா்பான விதிமுறைகள், சுகாதாரமாக உணவை கையாளும் முறைகள், உரிமம் மற்றும் பதிவு பெறுவதன் அவசியம், மருத்துவச் சான்றிதழ் பெறுதல் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும், உணவுப் பாதுகாப்பு பயிற்சி சான்றிதழ், மருத்துவச் சான்றிதழ், உணவு உரிமம் மற்றும் பதிவு சான்றிதழ் பெறுவதற்கான வசதிகளும் முகாமிலேயே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

இந்நிகழ்ச்சியில் ஆரணி பகுதியைச் சோ்ந்த 80-க்கும் மேற்பட்ட உணவகங்கள், பேக்கரி, இறைச்சிக் கடை மற்றும் இறைச்சிக் கூட உணவுத் தொழில் நிறுவனா்கள் பங்கேற்று பயனடைந்தனா்.

இவ்வகையான பயிற்சி முகாம்கள் மூலம் பாதுகாப்பான மற்றும் தரமான உணவு வழங்குவதை உறுதி செய்வதுடன், பொதுமக்களின் நலனைக் காக்கும் நோக்கில் உணவுத் தொழில் நிறுவனா்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்த உணவுப் பாதுகாப்புத் துறை தொடா்ந்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments