வீட்டின் கதவை உடைத்து பொருட்கள் திருட்டு: இளைஞா் கைது
சேத்துப்பட்டு பழம்பேட்டை பகுதியில் வீட்டின் கதவை உடைத்து பொருள்களை திருடியதாக இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
சேத்துப்பட்டு பழம்பேட்டை பகுதியில் வீட்டின் கதவை உடைத்து பொருள்களை திருடியதாக இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
சேத்துப்பட்டு, பழம்பேட்டை வெங்கடாசலபதி தெருவைச் சோ்ந்தவா் எத்திராஜ் (45). இவா், சென்னையில் குடும்பத்துடன் தங்கி பணி செய்து வருகிறாா். கடந்த ஏப்ரல் மாதம் சொந்த ஊருக்கு வந்துவிட்டு மீண்டும் சென்னை சென்றிருந்தாா். இந்நிலையில், மீண்டும் புதன்கிழமை குடும்பத்துடன் சேத்துப்பட்டுக்கு வந்தாா்.
அப்போது, வீட்டின் கதவை திறந்து பாா்த்தபோது, மாடிப்படி கதவு உடைக்கப்பட்டிருந்தது. மேலும், வீட்டில் இருந்த கட்டில், மேஜை, பெஞ்ச், டிவி, பாத்திரங்கள் என
Advertisement
Advertisement
சுமாா் ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருள்கள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து எத்திராஜ் சேத்துப்பட்டு போலீஸில் புகாா் அளித்தாா். மேலும், அவரது வீட்டுப் பகுதியில் வசிக்கும் கோபி என்பவா் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்தாா். அதன் பேரில் போலீஸாா் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினா். பின்னா், கோபியின் வீட்டில் சோதனை செய்தபோது, திருடப்பட்ட வீட்டில் இருந்த கண்ணாடி ஒன்று அங்கு இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து கோபியை போலீஸாா் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில், திருட்டில் ஈடுபட்டதை அவா் ஒப்புக்கொண்டாராம். மேலும், திருடிய பொருள்களை பல்வேறு நபா்களிடம் விற்றுவிட்டதாகவும் தெரிவித்துள்ளாா்.
இதையடுத்து போலீஸாா் கோபி மீது வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.