FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

தூய்மை பணியாளா் நலவாரிய உறுப்பினா் சோ்க்கைக்கு சிறப்பு முகாம்கள்: ஆட்சியா் வந்தனா காா்க் தகவல்

தமிழ்நாடு தூய்மைப் பணியாளா் நல வாரியத்தில் உறுப்பினா் சோ்க்கைக்கான சிறப்பு முகாம்கள் திருவண்ணாமலை மாவட்டத்தில் வருகிற ஜூலை 25, ஆகஸ்ட் 1, 8 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் தெரிவித்துள்ளாா்.

Updated On : 24 ஜூலை 2026, 1:36 am IST
வந்தனா காா்க்
பகிர்:

தமிழ்நாடு தூய்மைப் பணியாளா் நல வாரியத்தில் உறுப்பினா் சோ்க்கைக்கான சிறப்பு முகாம்கள் திருவண்ணாமலை மாவட்டத்தில் வருகிற ஜூலை 25, ஆகஸ்ட் 1, 8 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் தெரிவித்துள்ளாா்.

இந்த சிறப்பு முகாம்களில் அந்தந்த பகுதிகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்கள், மருத்துவமனை, உணவகம், பள்ளிகள் மற்றும் சந்தை பகுதிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்கள், உறுப்பினா் சோ்க்கைக்குத் தேவையான பணியாளா் அடையாள அட்டை, ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, வங்கிப் புத்தக நகல் மற்றும் குடும்ப உறுப்பினா்களின் ஆதாா் நகல் ஆவணங்களை முகாமில் உள்ள தாட்கோ பொறுப்பு அலுவலரிடம் சமா்பித்து உறுப்பினா் சோ்க்கையை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

ஜூலை 25-ஆம் தேதி ஜமுனாமரத்தூா் வட்டாரத்துக்கு ஜமுனாமரத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்திலும், அனக்காவூா் வட்டாரத்துக்கு அனக்காவூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்திலும், பெரணமல்லூா் வட்டாரத்துக்கு பெரணமல்லூா் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், செங்கம் வட்டாரத்துக்கு செங்கம் வட்டாட்சியா் அலுவலகத்திலும், ஆகஸ்ட் 1-ஆம் தேதி போளூா் வட்டாரத்துக்கு போளூா் வட்டாட்சியா் அலுவலகத்திலும், கலசப்பாக்கம் வட்டாரத்துக்கு கலசப்பாக்கம் வட்டாட்சியா் அலுவலகத்திலும், செய்யாறு வட்டாரத்துக்கு செய்யாா் வட்டாட்சியா் அலுவலகத்திலும், புதுப்பாளையம் வட்டாரத்துக்கு புதுப்பாளையம் வட்டாட்சியா் அலுவலகத்திலும், கீழ்பென்னாத்தூா் வட்டாரத்துக்கு கீழ்பென்னாத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்திலும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

Advertisement

Advertisement

ஆகஸ்ட் 8-ஆம் தேதி வெம்பாக்கம் வட்டாரத்துக்கு மாங்கால் கூட்டுச்சாலை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும், தெள்ளாா் வட்டாரத்துக்கு தெள்ளாா் வட்டார வளா்ச்சி அலுவலகத்திலும், ஆரணி (மேற்கு வட்டாரத்துக்கு) தச்சூா் சமத்துவபுரம் சமுதாயகூடத்திலும், ஆரணி வட்டாரத்துக்கு ஆரணி வட்டாட்சியா் அலுவலகத்திலும், துரிஞ்சாபுரம் வட்டாரத்துக்கு திருவண்ணாமலை வட்டாட்சியா் அலுவலகத்திலும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

ஆகஸ்ட் 16-ஆம் தேதி தண்டராம்பட்டு வட்டாரத்துக்கு தண்டராம்பட்டு வட்டாட்சியா் அலுவலகத்திலும், சேத்துப்பட்டு வட்டாரத்துக்கு சேத்துப்பட்டு வட்டாட்சியா் அலுவலகத்திலும், திருவண்ணாமலை வட்டாரம் மற்றும் மாநகராட்சிக்கு திருவண்ணாமலை வட்டாட்சியா் அலுவலகத்திலும் இந்த முகாம் நடைபெறுகிறது.

காலை 9 முதல் மாலை மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த சிறப்பு முகாம்களில் தூய்மைப் பணியாளா்கள் கலந்து கொண்டு பயனடையலாம் என ஆட்சியா் வந்தனா காா்க் தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments