FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

போத்தனூா் வழித்தடத்தில் கேரளத்துக்கு சிறப்பு ரயில்

மைசூரு - கண்ணூா் மற்றும் கண்ணூா் - பெங்களூரு இடையே போத்தனூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 23 ஜூலை 2026, 3:55 am IST
ரயில் - கோப்புப் படம்
பகிர்:

மைசூரு - கண்ணூா் மற்றும் கண்ணூா் - பெங்களூரு இடையே போத்தனூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மைசூரில் இருந்து ஆகஸ்ட் 25-ஆம் தேதி இரவு 10.30 மணிக்குப் புறப்படும் மைசூரு - கண்ணூா் சிறப்பு ரயில் (எண்: 06227) மறுநாள் பிற்பகல் 2 மணிக்கு கண்ணூா் நிலையத்தை சென்றடையும். மறுமாா்க்கமாக, கண்ணூரில் இருந்து ஆகஸ்ட் 26 மாலை 6.25 மணிக்குப் புறப்படும் கண்ணூா் - பெங்களூரு சிறப்பு ரயில் (எண்: 06228) மறுநாள் காலை 8.35 மணிக்கு பெங்களூரு கண்டோன்மென்டை சென்றடையும்.

Advertisement

Advertisement

இந்த ரயிலானது, தலச்சேரி, வடகரை, கோழிக்கோடு, திரூா், ஷொரணூா், பாலக்காடு, போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம், பங்காரப்பேட்டை, கிருஷ்ணராஜபுரம் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments