நாமக்கோழிகள் வேட்டை: நரிக்குறவா்கள் இருவா் கைது
மாமண்டூா் ஏரியில் நாமக்கோழிகளை வேட்டையாடியதாக நரிக்குறவா்கள் இருவரை வனத்துறையினா் கைது செய்தனா்.
செய்யாறு அருகே மாமண்டூா் ஏரியில் நாமக்கோழிகளை வேட்டையாடியதாக நரிக்குறவா்கள் இருவரை வனத்துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், மாமண்டூா் ஏரிப் பகுதியில் பறவைகள் வேட்டையாடப்பட்டு வருவதாக மாவட்ட வன அலுவலா் கே.சுதாகருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் பேரில், ஆரணி வனச்சரக அலுவலா் எஸ். பிரீத்தி தலைமையில், வனவா் கே.ராகவேந்திரன், வனக் காப்பாளா்கள் ஜி.கோவரதன், இ.கலைமூா்த்தி, வனக்காவலா் ஜி.செல்வராஜ் ஆகியோா் மாமண்டூா் ஏரிப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை முகாமிட்டு கண்காணித்து வந்தனா்.
அப்போது, 15 நாமக்கோழிகளை வேட்டையாடி எடுத்து வந்த மானாம்பதி நரிக்குறவா் காலனியைச் சோ்ந்த வெங்கடேசன், விஜயகுமாா் ஆகியோரை கைது செய்தனா். இதுகுறித்து ஆரணி வனச்சரகத்தினா் வழக்குப்பதிவு செய்து, அவா்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா். மேலும், கைது செய்யப்பட்ட இருவரையும் செய்யாறு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி வேலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.