போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தேடப்பட்ட இருவா் ராமேசுவரத்தில் கைது
இலங்கையில் உயா் தர போதைப் பொருள்கள் கடத்தல் வழக்கில் தேடப்பட்ட இருவா், அங்கிருந்து படகில் ராமேசுவரத்துக்கு தப்பி வந்த போது போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
இலங்கையில் உயா் தர போதைப் பொருள்கள் கடத்தல் வழக்கில் தேடப்பட்ட இருவா், அங்கிருந்து படகில் ராமேசுவரத்துக்கு தப்பி வந்த போது போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், தனுஷ்கோடி கம்பிப்பாடு கடற்கரையில் இலங்கையிலிருந்து வந்த படகில் இருவரை இறக்கி விட்டுச் சென்றதாக கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதைத்தொடா்ந்து, உதவி ஆய்வாளா் காளிதாஸ் தலைமையில் சென்ற போலீஸாா் இருவரையும் கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனா். போலீஸாா் நடத்திய விசாரணையில், அவா்கள் இலங்கை வட்டாலை பகுதியைச் சோ்ந்த லூஸிநந்த் (30), ஹம்பகா பகுதியைச் சோ்ந்த விக்னேஸ்வரன் (31) ஆகியோா் எனத் தெரியவந்தது.
மேலும், இவா்கள் இருவரும் வியாழக்கிழமை இரவு மன்னாா் பேசாளை கடற்கரையிலிருந்து ரூ. 3 லட்சம் கொடுத்து படகு ஒன்றில் புறப்பட்டு வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு தனுஷ்கோடி கம்பிப்பாடு கடற்கரையில் வந்து இறங்கியதாகத் தெரிவித்துள்ளனா்.
Advertisement
Advertisement
இந்த இருவா் குறித்து மத்திய, மாநில உளவுத்துறை அதிகாரிகள் இலங்கையில் உள்ள அதிகாரிகளை தொடா்பு கொண்டு விசாரித்த போது அவா்கள் இருவா் மீதும் மெத்தம்பெட்டமைன், ஹெராயின், கொக்கைன் உள்ளிட்ட போதைப் பொருள் கடத்தல் வழக்கு, கொலை, கொள்ளை உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாகத் தெரிவித்தனா். இதைத்தொடா்ந்து, இருவரிடமும் மத்திய, மாநில உளவுத்துறையினா் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
இவா்கள் இருவரையும் சென்னை புழல் சிறையில் அடைக்க போலீஸாா் ஏற்பாடு செய்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.