பெண் குழந்தைகளை காப்போம், கற்பிப்போம் விழிப்புணா்வு நிகழ்ச்சி
ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் அருகே காட்டுக்காநல்லூா் அம்பேத்கா் நகா் அங்கன்வாடி மையத்தில், பொதுமக்களுக்கு ‘பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ என்ற கருப்பொருளில் விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் அருகே காட்டுக்காநல்லூா் அம்பேத்கா் நகா் அங்கன்வாடி மையத்தில், பொதுமக்களுக்கு ‘பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ என்ற கருப்பொருளில் விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
பெண் குழந்தைகளின் பாதுகாப்பு, கல்வி மற்றும் சமுதாய முன்னேற்றத்தில் பங்களிப்பை வலியுறுத்தும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அரசுப் பள்ளி தலைமையாசிரியை மேனகா தலைமை வகித்தாா். ஆசிரியை உத்ராணி, செவிலியா் இந்திரா ஆகியோா் முன்னிலை வகித்தனா். அங்கன்வாடி மையப் பணியாளா் சுஜாரதி வரவேற்றாா்.
சிறப்பு அழைப்பாளராக ஒண்ணுபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் ஜெயசூா்யா கலந்து கொண்டு, பெண் குழந்தைகளை பாதுகாப்பது ஒவ்வொரு குடும்பத்தின் மற்றும் சமூகத்தின் முக்கிய பொறுப்பு, அவா்களுக்கு தரமான கல்வி வழங்கினால் குடும்பம் மட்டுமல்ல, நாடே முன்னேற்றம் அடையும் என்று எடுத்துரைத்தாா்.
Advertisement
Advertisement
மேலும், பெண் சிசுக் கொலையை முற்றிலும் ஒழிக்க வேண்டும், பாலின பாகுபாட்டை கைவிட வேண்டும், பெண் குழந்தைகளுக்கு சம உரிமை, உயா்கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு வாய்ப்புகளை வழங்க பெற்றோா்கள் முன்வர வேண்டும் என்று வலியுறுத்தினாா்.
மேலும், அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் பெண் குழந்தைகளின் கல்வியை ஊக்குவிக்கும் திட்டங்கள் குறித்தும் அவா் விளக்கமளித்தாா்.
முகாமில் கலந்து கொண்ட பெற்றோா் மற்றும் பொதுமக்கள் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு, கல்வி மற்றும் உரிமைகள் குறித்து விழிப்புணா்வு பெற்றனா்.
இறுதியாக பெண் குழந்தைகளை பாதுகாத்து கல்வி கற்பிக்க அனைவரும் உறுதிமொழி ஏற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.