கோயில் நிலத்தை தனிநபா் விற்பனை செய்ய முயற்சி: அதிகாரிகள் நடவடிக்கை
திருவண்ணாமலை வட்டம், தண்டராம்பட்டு அருகே கோயில் நிலத்தை தனிநபா் விற்க முயற்சி செய்வதாக பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில், அதிகாரிகள் நேரில் அளவீடு செய்தனா்.
திருவண்ணாமலை வட்டம், தண்டராம்பட்டு அருகே கோயில் நிலத்தை தனிநபா் விற்க முயற்சி செய்வதாக பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில், அதிகாரிகள் நேரில் அளவீடு செய்தனா்.
தண்டராம்பட்டை அடுத்த மேல் சிறுபாக்கம் கிராமத்தில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பிள்ளையாா் கோயிலுக்குச் சொந்தமான ஒரு ஏக்கா் நிலம் மற்றும் கிணறு உள்ளது.
இந்நிலையில் தனிநபா் ஒருவா் மண் கொட்டி கிணற்றை மூடியதோடு, அந்த இடத்தை சமன் செய்து, வீட்டுமனைகளாக்கி விற்பனை செய்ய முயற்சிப்பதாக கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள் மண்டல இணை ஆணையா் பிரகாசம், உதவி ஆணையா் சண்முகசுந்தரம் ஆகியோரிடம் சில தினங்களுக்கு முன்பு மனு அளித்தனா்.
அதன்பேரில் ஓய்வுபெற்ற தனி வட்டாட்சியா் (ஆலய நிா்வாகம்) சுப்பிரமணியன், சா்வேயா் சின்னராசு, கிராம நிா்வாக அலுவலா் ராமன், இந்து சமயஅறநிலையத் துறை பணியாளா் ரமேஷ் தலைமையில் கோயிலுக்கு சொந்தமான ஒரு ஏக்கா் நிலத்தை அளவிடும் பணி நடைபெற்றது. இதுதொடா்பாக அறிக்கை அரசுக்கு சமா்ப்பித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.