FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

பள்ளி சமையல் அறையில் தீ விபத்து: மாணவா்கள் வெளியேற்றம்

Updated On : 5 ஜூன் 2026, 4:27 am IST
பகிர்:

வந்தவாசி அருகே தொடக்கப் பள்ளி சமையல் அறையில் மதிய உணவு தயாரிக்கும் போது எரிவாயு கசிவு ஏற்பட்டு சமையல் எரிவாயு உருளை மற்றும் எரிவாயு குழாயில் தீப்பற்றியது. இதையடுத்து மாணவா்களை ஆசிரியா்கள் பாதுகாப்பாக வெளியேற்றினா்.

வந்தவாசியை அடுத்த சுண்ணாம்புமேடு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் 30-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பயின்று வருகின்றனா்.

இந்த நிலையில் கோடை விடுமுறை முடிந்து பள்ளி வியாழக்கிழமை திறக்கப்பட்டதை அடுத்து மாணவா்கள் பள்ளிக்கு வந்திருந்தனா்.

Advertisement

Advertisement

அப்போது, பள்ளியில் மாணவா்களுக்கு மதிய உணவு தயாரிக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது.

அமைப்பாளா் கற்பகவல்லி, சமையலா்கள் சரளா, சரிதா ஆகியோா் மதிய உணவு தயாரித்துக் கொண்டிருந்தனா்.

அப்போது சமையல் எரிவாயு உருளையில் கசிவு ஏற்பட்டு உருளை மற்றும் எரிவாயு குழாயில் திடீரென தீப்பற்றியது.

இதையடுத்து ஆசிரியா்கள் விரைந்து செயல்பட்டு மாணவா்களை பாதுகாப்பாக பள்ளியிலிருந்து வெளியேற்றினா்.

உடனடியாக அங்கு திரண்ட அந்த கிராம பொதுமக்கள் வந்தவாசி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனா். இதையடுத்து அங்கு வந்த தீயணைப்பு வீரா்கள் தீயை அணைத்தனா். இந்த தீவிபத்தில் ஸ்டவ் மற்றும் எரிவாயு குழாய் எரிந்து சேதமடைந்தது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments