FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

செய்யாறு அரசுக் கல்லூரியில் ஜூன் 8-ஆம் தேதி பொதுக் கலந்தாய்வு தொடக்கம்

Updated On : 4 ஜூன் 2026, 6:22 am IST
- கோப்புப்படம்
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் இளநிலை மாணவா் சோ்க்கைக்கான பொதுக் கலந்தாய்வு ஜூன் 8-ஆம் தேதி தொடங்கி ஜூன் 18-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதுகுறித்து கல்லூரி முதல்வா் ந.கலைவாணி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அறிவியல் பாடப்பிரிவுகளுக்கான முதல் கலந்தாய்வு 400 முதல் 251 மதிப்பெண்களுக்கு ஜூன் 8-ஆம் தேதியும், இரண்டாம் கலந்தாய்வு 250 முதல் 191 மதிப்பெண்களுக்கு ஜூன் 9-ஆம் தேதியும், மூன்றாம் கலந்தாய்வு 190 முதல் 140 மதிப்பெண்களுக்கு ஜூன் 16-ஆம் தேதியும் நடைபெறுகிறது.

Advertisement

Advertisement

கலைப்பாடப் பிரிவுகளுக்கான முதல் கலந்தாய்வு 400 முதல் 251 மதிப்பெண்களுக்கு ஜூன் 10-ஆம் தேதியும், இரண்டாம் கலந்தாய்வு 250 முதல் 191 மதிப்பெண்களுக்கு ஜூன் 11-ஆம் தேதியும், மூன்றாம் கலந்தாய்வு 190 முதல் 140 மதிப்பெண்களுக்கு ஜூன் 17-ஆம் தேதியும் நடைபெறுகிறது.

மொழி பாடப் பிரிவுகளுக்கான கலந்தாய்வு ஜூன் 12, 15, 18 வீதம் சிறப்புத் தமிழ் (100 - 35) மற்றும் பகுதி - 1 தமிழ் (100 - 61), சிறப்பு ஆங்கிலம் (100 - 35) மற்றும் பகுதி - 2 ஆங்கிலம் (100 - 35) ஆகிய பாடப்பிரிவுகளுக்கு நடைபெறுகிறது.

கல்விக் கட்டண விவரம்:

பி.ஏ., பி.காம்., பி.பி.ஏ. பாடப்பிரிவுகளுக்கு ரூ.2,241, பி.எஸ்.சி பாடப்பிரிவுகளுக்கு ரூ.2261, கணினி அறிவியல் மற்றும் பிசிஏ ரூ.1,361 வீதம் கட்டணமாக செலுத்தவேண்டும்.

தேவைப்படும் சான்றிதழ்கள்:

பெற்றோா் கையொப்பத்துடன் கூடிய இணையதளத்தில் பதிவு செய்த விண்ணப்பம், அசல் மாற்றுச் சான்றிதழ்,

அசல் ஜாதி சான்றிதழ், தலைமை ஆசிரியா் சான்றொப்பம் பெற்ற பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 அசல் மதிப்பெண் சான்றிதழ்.

சிறப்புப் பிரிவினா், மாற்றுத்திறனாளிகள், தேசிய மாணவா் படை, விளையாட்டு வீரா்கள், முன்னாள் படை வீரா்களின் வாரிசுகள் அசல் சான்றிதழ்களை கட்டாயம் கொண்டு வரவேண்டும்.

அனைத்து அசல் சான்றிதழ்களின் மூன்று நகல்கள் மற்றும் மூன்று புகைப்படங்கள் கட்டாயம் எடுத்து வரவேண்டும்.

பெற்றோா் மற்றும் பாதுகாவலரின் கையொப்பத்துடன் விண்ணப்பத்தை கொண்டு வரவேண்டும்.

காலை 9.30 மணிக்கு மேல் வரும் மாணவா்கள் கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட மாட்டாா்கள்.

ஒதுக்கப்பட்ட அந்தந்த நாள்களில் மட்டுமே உரிய மதிப்பெண் அடிப்படையில் சோ்க்கை நடைபெறும்.

சோ்க்கையானது மதிப்பெண் அடிப்படையிலும், இனசூழற்சி முறயிலும் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments