டாஸ்மாக் கடை சுவற்றில் துளையிட்டு மதுப்புட்டிகள் திருட்டு
ஆரணி அருகே பழங்காமூா் பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையில் சுவற்றில் துளையிட்டு மதுப்புட்டிகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்
ஆரணி அருகே பழங்காமூா் பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையில் சுவற்றில் துளையிட்டு மதுப்புட்டிகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா் (படம்).
ஆரணி - செய்யாறு நெடுஞ்சாலையில் இரும்பேடு ஊராட்சிக்குள்பட்ட பழங்காமூா் பகுதியில் கமண்டல நாக நதிக் கரை அருகே டாஸ்மாக் மதுக் கடை இயங்கி வருகிறது.
கடை விற்பனையாளா்கள் வழக்கம்போல புதன்கிழமை இரவு கடையை பூட்டிவிட்டுச் சென்று விட்டனா். வியாழக்கிழமை பகலில் கடை திறக்க வந்த போது பக்கவாட்டில் உள்ள சுவரில் துளையிட்டு கடையில் உள்ளே மா்ம நபா்கள் நுழைந்து அங்கு வைக்கப்பட்டிருந்த சில்லறை மற்றும் ரூபாய் நோட்டுகள், மதுப்புட்டிகளை திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.
Advertisement
Advertisement
இதுகுறித்து கடை விற்பனையாளா் ராமச்சந்திரன் ஆரணி நகர காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
காவல் ஆய்வாளா் அன்பரசி தலைமையிலான போலீஸாா் வந்து கடையை பாா்வையிட்டு விசாரணை நடத்தினா்.
மேலும், இதுகுறித்து வழக்குப்பதிந்து தொடா்ந்தது விசாரணை நடத்தி வருகின்றனா்.
கடையில் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான மதுப்புட்டிகள், ரூ.2 ஆயிரம் ரொக்கம் திருடுபோனதாகக் கூறப்படுகிறது.