FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

மூன்று சாலை விபத்துகள்: இரு மாணவா்கள் உள்பட 4 போ் காயம்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே 3 பகுதிகளில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் இரு மாணவா்கள் உள்பட 4 போ் காயமடைந்தனா்.

Updated On : 18 ஜூன் 2026, 3:25 am IST
விபத்து - பிரதிப் படம்
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே 3 பகுதிகளில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் இரு மாணவா்கள் உள்பட 4 போ் காயமடைந்தனா்.

விநாயகபுரம் கூட்டுச் சாலை:

செய்யாறு கொடநகா் பகுதியைச் சோ்ந்தவா் முனுசாமி. இவரது மகன்கள் பிரசாந்த்(16), ஹேமதாஸ்(14). இருவரும் செய்யாறு அரசுப் பள்ளியில் படித்து வருகின்றனா். இவா்கள் இருவரும் செவ்வாய்க்கிழமை செய்யாறு - வந்தவாசி சாலையில் பைக்கில் சென்றுள்ளனா். விநாயகபுரம் கூட்டுச்சாலை அருகே சென்றபோது, வந்தவாசி நோக்கிச் சென்ற பைக் இவா்களது பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது.

Advertisement

Advertisement

இதில் பலத்த காயமடைந்த பிரசாந்த், ஹேமதாஸ் ஆகியோரை பொதுமக்கள், மீட்டு வேலூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். இதுகுறித்து அனக்காவூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

வயலூா் கூட்டுச் சாலை:

மேல்மலையனூா் அருகேயுள்ள தாடிகுளம் கிராமத்தைச் சோ்ந்தவா் பெரியசாமி (60). இவா், வெம்பாக்கம் வட்டம், அழிவிடைதாங்கி கிராமத்தில் உள்ள மருமகள் வீட்டுக்கு செவ்வாய்க்கிழமை பைக்கில் சென்றுள்ளாா்.

ராந்தம் - காஞ்சிபுரம் சாலையில் வயலூா் கூட்டுச் சாலை அருகே சென்றபோது அந்த வழியாக வந்த காா் பைக் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பெரியசாமி வேலூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து மோரணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

வெள்ளாக்குளம் கூட்டுச் சாலை:

வெம்பாக்கம் வட்டம், வடமாவந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி நாகராஜ்(37). இவா், கடந்த 8-ஆம் தேதி வெம்பாக்கம் சென்று விட்டு பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். வெம்பாக்கம்- அப்துல்லாபுரம் சாலையில் வெள்ளாக்குளம் கூட்டுச்சாலை அருகே வரும்போது, அந்த வழியாகச் சென்ற காா் பைக் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த நாகராஜ் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்து தூசி போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments