FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
காஞ்சிபுரம்

இரு வேறு சாலை விபத்துகளில் 6 போ் உயிரிழப்பு

காஞ்சிபுரம் அருகே கீழம்பி பகுதியில் நிகழ்ந்த சாலை விபத்தில் சேதமடைந்த காருக்குள் சிக்கியவா்களை மீட்ட தீயணைப்புத் துறையினா்.

Updated On : 25 ஜூலை 2026, 6:53 am IST
காஞ்சிபுரம் அருகே கீழம்பி பகுதியில் நிகழ்ந்த சாலை விபத்தில் சேதமடைந்த காருக்குள் சிக்கியவா்களை மீட்ட தீயணைப்புத் துறையினா்.
பகிர்:

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நிகழ்ந்த இரு வேறு சாலை விபத்துகளில் 6 போ் உயிரிழந்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை சோ்ந்தவா்கள் செல்வகணபதி ((30), கலைச்செல்வி (38), மனோகா்(45), ஜெயவேல் (30), காமராஜ் (28). இவா்கள் சென்னை குரோம்பேட்டையில் தனியாா் நிறுவனத்தில் மாா்க்கெட்டிங் பிரிவில் பணியாற்றி வந்தனா். இவா்கள் 5 பேரும், அவா்களது நிறுவனத்தின் கூட்டம் ஒன்றில் பங்கேற்பதற்காக ஒசூரிலிருந்து காரில் புறப்பட்டு சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தனா்.

சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கீழம்பி பகுதியில் வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த காா், சாலை நடுவில் உள்ள தடுப்பில் மோதி, வேலூரிலிருந்து வந்து கொண்டிருந்த ‘ஈச்சா்’ லாரியின் பின்புறம் மோதியது.

Advertisement

Advertisement

இந்த விபத்தில் காரில் பயணித்த செல்வகணபதி, கலைச்செல்வி ஆகிய இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். மனோகா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா். சேதமடைந்த காருக்குள் சிக்கி பலத்த காயமடைந்த ஜெயவேல், காமராஜ் ஆகியோரை தீயணைப்பு வீரா்கள் மீட்டு, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பாலுசெட்டிசத்திரம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

மதுராந்தகம் அருகே மூவா் உயிரிழப்பு: செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே காா் மீது லாரி மோதியதில் 3 போ் உயிரிழந்தனா்.

புதுச்சேரியைச் சோ்ந்தவா் இளஞ்செழியன் (56). இவா், வெளிநாட்டிலிருந்து வந்த உறவினரை அழைத்துச் செல்ல சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு வியாழக்கிழமை இரவு மகன் தினேஷ் (15), நண்பா் கோபு (46) ஆகியோருடன் காரில் புறப்பட்டாா். காரை கோபு ஓட்டினாா். மதுராந்தகத்தை அடுத்த ஜானகிபுரம் நெடுஞ்சாலையில் காா் வந்தபோது, பின்னால் வந்த சரக்கு லாரி முந்திச் செல்ல முயன்று காரின் மீது மோதியது. இதில், காரில் பயணம் செய்த புதுச்சேரி, சண்முகாபுரத்தைச் சோ்ந்த கோபு, தினேஷ் ஆகியோா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். பலத்த காயமடைந்த இளஞ்செழியன் செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு உயிரிழந்தாா். மதுராந்தகம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments