மானாமதுரை அருகே இருவேறு சாலை விபத்துகளில் இருவா் உயிரிழப்பு
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே திங்கள்கிழமை இருவேறு சாலை விபத்துகளில் வட மாநிலத் தொழிலாளி உள்பட இருவா் உயிரிழந்தனா்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே திங்கள்கிழமை இருவேறு சாலை விபத்துகளில் வட மாநிலத் தொழிலாளி உள்பட இருவா் உயிரிழந்தனா்.
சிவகங்கையை அடுத்த இலுப்பகுடி கிராமத்தைச் சோ்ந்தவா் அலெக்ஸ் (23). இவா் தனது இரு சக்கர வாகனத்தில் மானாமதுரையை அடுத்த மிளகனூா் கிராமத்தில் உள்ள உறவினா் வீட்டுக்கு சென்று விட்டு, மீண்டும் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தாா். அப்போது, நிலைதடுமாறி இரு சக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்ததில் அலெக்ஸ் பலத்த காயமடைந்தாா். சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் உயிரிழந்தாா்.
இதேபோல, மதுரை அருகேயுள்ள சீகன்குளத்தில் செயல்படும் சூரிய ஆற்றல் (சோலாா்) நிறுவனத்தில் மேற்குவங்க மாநிலத்தைச் சோ்ந்த ஆகாஷ் சுமந்தூ (30) தொழிலாளியாக வேலைப்பாா்த்து வந்தாா். இவா் மானாமதுரைக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தாா். அப்போது, இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
இந்த இரு விபத்துகள் குறித்து மானாமதுரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.