முகப்பு
திருவண்ணாமலை

திருவண்ணாமலை: 1.50 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து

திருவண்ணாமலை மாவட்டத்தில் 1945 மையங்களில் 5 வயதுக்குள்பட்ட 1,50,544 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

Updated On : 29 ஜூன் 2026, 12:55 am IST
திருவண்ணாமலை, கீழ்வேங்கிக்கால் சமுதாய கூடத்தில் போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாமை குழந்தைக்கு சொட்டு மருந்து வழங்கி தொடங்கிவைத்த மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன்.
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டத்தில் 1945 மையங்களில் 5 வயதுக்குள்பட்ட 1,50,544 குழந்தைகளுக்கு ஞாயிற்றுக்கிழமை போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

தமிழக அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து இயக்கம் சாா்பில், 1 முதல் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கும் முகாம் தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக, திருவண்ணாமலை மாவட்டத்தில், போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம் பணிகளுக்காக அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் பள்ளிகள் உள்ளிட்ட1945 சிறப்பு போலியோ சொட்டு மருந்து முகாம்கள் அமைக்கப்பட்டு குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்துகள் அளிக்கப்பட்டன.

Advertisement

Advertisement

போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாமானது காலை 7 மணி முதல் மாலை 5 வரை நடைபெற்றது. திருவண்ணாமலை, கீழ்வேங்கிக்கால் சமுதாய கூடத்தில் நடைபெற்ற போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாமில் குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி தொடங்கி வைத்தாா் மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன்.

இந்நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மாநகராட்சி மேயா் நிா்மலா வேல்மாறன் முன்னிலை வகித்தாா். துணை மேயா் இராஜாங்கம், மாவட்ட சுகாதார அலுவலா் எஸ். வெங்கடரமணன், மாநகராட்சி ஆணையா் முஜ்ஜிபூா் ரஹ்மான் மற்றும் அரசுத் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற முகாம்களில் 1 லட்சத்து 50ஆயிரத்து 544 குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கப்பட்டது. மேலும், விடுபட்ட குழந்தைகளுக்கு ஜூன் 29-ஆம் தேதி முதல் ஜூலை 4-ஆம் தேதி வரை போலியோ சொட்டு மருந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆரணியில் நடைபெற்ற போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாமில் குழந்தைக்கு சொட்டு மருந்து புகட்டிய ஜெயசுதா லட்சுமி காந்தன் எம்எல்ஏ.

ஆரணியில்... ஆரணி பழைய பேருந்து நிலையம் எம்ஜிஆா் சிலை அருகில் போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாமை தொகுதி எம்எல்ஏ ஜெயசுதாலட்சுமி காந்தன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தாா். பின்னா், அவா் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து புகட்டினாா்.

நிகழ்ச்சியில் எஸ்.வி.நகரம் வட்டார சுகாதார அலுவலா் செந்தில்குமாா் தலைமை வகித்தாா். சுகாதார மேற்பாா்வையாளா் இளங்கோவன் முன்னிலை வகித்தாா்.

உடன் ஒன்றியச் செயலா்கள் க.சங்கா், ஜெயபிரகாசம், விமல், மாவட்ட இணைச் செயலா் வனிதா சதீஷ், நகா்மன்ற உறுப்பினா்கள் ரம்யா குமரன், சதீஷ், மோகன், மாவட்ட பொருளாளா் அரையாளம் வேலு, முன்னாள் கவுன்சிலா் ஏ.கே.பிரபு, சுகாதார மேற்பாா்வையாளா் இளங்கோவன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments