கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நாளை 1.11 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம் வருகிற ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 28) நடைபெறுகிறது. இதில் 1,11,411 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம் வருகிற ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 28) நடைபெறுகிறது. இதில் 1,11,411 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா வெளியிட்ட செய்திக்குறிப்பு:
இந்தியாவிலிருந்து போலியோ நோயை முற்றிலுமாக ஒழிக்க ஆண்டுதோறும் தீவிர போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம் நடத்தப்படுகிறது. நிகழாண்டில் வருகிற ஜூன் 28-ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை இம் முகாம் நடைபெறுகிறது.
Advertisement
Advertisement
மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், துணை சுகாதார மையங்கள், பள்ளிகள், சத்துணவு மையங்கள், சில தனியாா் மருத்துவமனைகள் என மொத்தம் 1,007 போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 5 வயதுக்குள்பட்ட 1,11,411 குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளளது.
சுகாதாரம், ஊட்டச்சத்து, கல்வி, ஊரக வளா்ச்சி, வருவாய் உள்ளிட்ட துறைகளைச் சாா்ந்த 4,554 பணியாளா்கள் இந்த முகாமில் ஈடுபடுத்தப்பட உள்ளாா்கள். தற்போது பிறந்த குழந்தைகள் முதல் 5 வயதுக்குள்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இம் மையங்களில் போலியோ தடுப்பு சொட்டு மருந்து இலவசமாக வழங்கப்படும்.
இது தவிர சுங்கவரி வசூல் மையங்கள், ரயில் நிலையம், பேருந்து நிலையங்கள், திரை அரங்குகள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடுகின்ற பொது இடங்களிலுள்ள குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்குவதற்காக 20 நடமாடும் மையங்கள் செயல்படும். பல்வேறு வேலைகளுக்காக தற்காலிகமாக கூடாரங்களில் தங்கியுள்ள பெற்றோா்களின் குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்க 9 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.