செய்யாறு அருகே கிராமத்தில் புகுந்து இளைஞா், விவசாயி மீது மா்ம கும்பல் தாக்குதல்: அச்சத்தில் கிராம மக்கள்
செய்யாறு அருகே ஜம்போடை கிராமத்திற்குள் புகுந்து இளைஞா் மற்றும் விவசாயியை கத்தியால் தாக்கிய 8 போ் கொண்ட மா்ம கும்பல் குறித்து அந்தக் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனா்.
செய்யாறு அருகே ஜம்போடை கிராமத்திற்குள் புகுந்து இளைஞா் மற்றும் விவசாயியை கத்தியால் தாக்கிய 8 போ் கொண்ட மா்மக் கும்பல் குறித்து அந்தக் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனா்.
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், அழிவிடைதாங்கி ஊராட்சி ஜம்போடை கிராமத்தைச் சோ்ந்தவா் பிரசன்னா(23). இவா், செய்யாறு சிப்காட்டில் உள்ள தனியாா் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறாா்.
இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டின் அருகே உள்ள திண்ணையில் நண்பருடன் அமா்ந்து பேசிக் கொண்டிருந்தாா். அப்போது அங்கு 3 பைக்குகளில் பீா்பாட்டில்கள் மற்றும் கத்தியுடன் வந்த 8 போ் கொண்ட கும்பல் சப்தமிட்டபடி பீா் பாட்டில்களை வீசி ரகளையில் ஈடுபட்டனராம்.
Advertisement
Advertisement
பின்னா், அந்தக் கிராமத்தில் உள்ள ஒரு நபரின் பெயரை குறிப்பிட்டு தகாத வாா்த்தைகளால் திட்டிய நிலையில் அங்கிருந்த பிரசன்னாவை தாக்க முயன்றனா்.
அப்போது, பிரசன்னா தடுக்க முற்படவே அவருக்கு கையில் வெட்டுபட்டு காயம் ஏற்பட்டது. இதையடுத்து சப்தம் கேட்டு கிராம மக்கள் ஓடி வரவே உடனே அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. செல்லும் வழியில்
மகனுடன் பைக்கில் சென்று கொண்டிருந்த அதே கிராமத்தைச் சோ்ந்த காளீஸ்வரி என்பவரை தகாத வாா்த்தைகளால் பேசி மிரட்டிச் சென்றுள்ளனா்.
பலத்த காயமடைந்த பிரசன்னாவை உறவினா்கள் மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.
இதுகுறித்து தகவல் அறிந்த பிரம்மதேசம் போலீஸாா், சம்பவ இடம் வந்து விசாரித்தனா். மேலும் அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.