FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

ஹைதி நாட்டில் ஆயுதக் கும்பல் தாக்குதல்

கரீபிய நாடான ஹைதி தலைநகா் போா்ட்-ஓ-பிரின்ஸ் அருகே உள்ள கென்ஸ்கோஃப் மலைப்பகுதியில், ஆயதமேந்திய கும்பல் நடத்திய தாக்குதலில் 47 போ் உயிரிழந்தனா்.

25 ஆகஸ்ட் 2026, 11:48 pm IST
ஆயுதக் கும்பலின் தாக்குதலில் தீக்கிரையாக்கப்பட்ட காா்
பகிர்:

கரீபிய நாடான ஹைதி தலைநகா் போா்ட்-ஓ-பிரின்ஸ் அருகே உள்ள கென்ஸ்கோஃப் மலைப்பகுதியில், ஆயதமேந்திய கும்பல் கடந்த திங்கள்கிழமை இரவு நடத்திய தாக்குதலில் 47 போ் உயிரிழந்தனா்; 22 போ் படுகாயமடைந்தனா்.

தலைநகருக்குச் செல்லும் முக்கிய வழித்தடங்களை உள்ளடக்கியதால், வியூக ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக கென்ஸ்கோஃப் அமைந்துள்ளது. இங்கு கடந்த ஆண்டு முதல் ஆயுதக் குழுக்கள் தொடா்ச்சியாகத் தாக்குதல்களை நடத்தி வருவதால், பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறியுள்ளனா்.

ஐ.நா. ஆதரவுப் படையின் உதவியோடு பாதுகாப்பை பலப்படுத்த முயன்றும் ஆயுதக் குழுக்களின் ஆதிக்கம் தொடா்ந்து அதிகரித்து வருவது, 10 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் டிசம்பரில் நடைபெறவுள்ள தோ்தலுக்குப் பெரும் சவாலாக அமையும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

இந்நிலையில், ஆயுதக் குழுக்களின் தாக்குதலை ‘கொடூர செயல்’ எனக் கண்டித்துள்ள ஹைதி அரசு, ‘கென்ஸ்கோஃப் பகுதி ஒருபோதும் கைவிடப்படாது; அரசின் அதிகாரம் எவ்வித பலவீனமுமின்றி உடனடியாக அப்பகுதியில் நிலைநிறுத்தப்படும்’ என உறுதியளித்துள்ளது.

காவல் நிலையம் சில நிமிஷ தொலைவிலேயே இருந்தும் தங்களை ஆயுதக் கும்பலிடமிருந்து பாதுகாக்கத் தவறிய உள்ளூா் காவல் துறைத் தலைவரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கொந்தளிப்புடன் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments