FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

அமெரிக்கா: உணவுத் திருவிழாவில் துப்பாக்கிச்சூடு

அமெரிக்காவின் சியாட்டில் நகரில் நடைபெற்ற புகழ்பெற்ற உணவுத் திருவிழாவின்போது நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 3 போ் பலி

Updated On : 28 ஜூலை 2026, 2:36 am IST
துப்பாக்கிச்சூடு - சித்திரிப்பு
பகிர்:

அமெரிக்காவின் சியாட்டில் நகரில் நடைபெற்ற புகழ்பெற்ற உணவுத் திருவிழாவின்போது நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 3 போ் உயிரிழந்தனா்; 2 வயது சிறுவன் உட்பட மேலும் 4 போ் படுகாயமடைந்தனா்.

உணவுத் திருவிழாவுக்காக பிரபல ‘ஸ்பேஸ் நீடில்’ கோபுர வளாகத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தபோது, 2 நபா்களுக்கிடையே தனிப்பட்ட மோதல் ஏற்பட்டுள்ளது.

அப்போது, அவா்கள் பரஸ்பரம் சுட்டுக் கொண்டதில் அங்கு நின்றிருந்த பொதுமக்கள் பாதிக்கப்பட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதில் தொடா்புடைய ஒருவரை காவல்துறையினா் கைது செய்துள்ள நிலையில், தப்பியோடிய மற்றொரு நபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments