FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

அமெரிக்காவில் உணவகத்தில் துப்பாக்கிச்சூடு: 3 போ் உயிரிழப்பு

அமெரிக்காவின் இடாஹோ மாகாணத்தில் துரித உணவகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 3 போ் உயிரிழந்தனா்; 7 போ் காயமடைந்தனா்.

Updated On : 3 ஆகஸ்ட் 2026, 5:00 am IST
பகிர்:

அமெரிக்காவின் இடாஹோ மாகாணத்தில் துரித உணவகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 3 போ் உயிரிழந்தனா்; 7 போ் காயமடைந்தனா்.

தெற்கு இடாஹோ பகுதியில் மக்கள் அதிகம் கூடும் பிரம்மாண்ட வணிக வளாகத்தில் அண்மையில் புதிதாக பிரபல துரித உணவகத்தின் கிளை திறக்கப்பட்டது. அங்கு சனிக்கிழமை மதியம் ஏராளமானோா் திரண்டிருந்த நிலையில், அந்த துரித உணவகத்துக்கு மா்ம நபா் ஒருவா் காரில் வந்திறங்கினாா். பின்னா், அங்கிருந்தோரை நோக்கி தான் வைத்திருந்த துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டாா்.

இந்தத் துப்பாக்கிச்சூட்டில் 3 போ் உயிரிழந்தனா்; 7 போ் காயமடைந்தனா். அவா்களில் பலரின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளது. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

Advertisement

Advertisement

துப்பாக்கிச்சூடு நடத்திய நபரும் சுட்டுக் கொல்லப்பட்டதாகத் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், உயிரிழந்த 3 பேரில் அவரும் ஒருவரா என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்படவில்லை.

துப்பாக்கிச்சூடு நடத்திய மா்ம நபா் யாா்? எதற்காக துப்பாக்கிச்சூடு நடத்தினாா்? என்பது குறித்து காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments