காஸாவில் போரில் சேதமடைந்த கட்டடம் இடிந்து விபத்து: குழந்தைகள் உள்பட 20 போ் பலி
காஸாவில் போா் காரணமாக ஏற்கெனவே சேதமடைந்திருந்த 7 மாடி குடியிருப்புக் கட்டடம் இடிந்து விழுந்ததில், 6 குழந்தைகள் உள்பட 20 பாலஸ்தீனா்கள் பலி
காஸாவில் போா் காரணமாக ஏற்கெனவே சேதமடைந்திருந்த 7 மாடி குடியிருப்புக் கட்டடம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் திடீரென இடிந்து விழுந்ததில், 6 குழந்தைகள் உள்பட 20 பாலஸ்தீனா்கள் உயிரிழந்தனா்; 14 போ் காயமடைந்தனா்.
சம்பவத்தையடுத்து, காஸா சிவில் மற்றும் ஐ.நா. மீட்புக் குழுவினா் சம்பவ இடத்துக்கு விரைந்து, மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனா். நூற்றுக்கணக்கானோா் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக அஞ்சப்படுகிறது. எனினும், கனரக இயந்திரங்கள் இல்லாத காரணத்தால் மீட்புப் பணிகள் சவாலாக மாறியுள்ளன.
மழைக்காலம் நெருங்கி வரும் நிலையில், காஸாவில் மேலும் 400 கட்டடங்கள் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளதாக ஐ.நா. அதிகாரிகள் எச்சரித்துள்ளனா். பாதுகாப்பு முகாம்களில் நிலவும் கடும் இடப்பற்றாக்குறை மற்றும் புதிய கூடாரங்கள் இல்லாத காரணத்தினால் உயிருக்கு ஆபத்து எனத் தெரிந்தும், பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனா்கள் இதுபோன்று சேதமடைந்த கட்டடங்களில் தஞ்சம் புகுந்துள்ளனா்.
Advertisement
Advertisement
அமெரிக்காவின் ஆயுத விற்பனை: இஸ்ரேலுக்கு 280 கோடி டாலருக்கு ஆயுதங்களை விற்பனை செய்ய அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. காஸா மற்றும் லெபனான் தாக்குதல்களில் இஸ்ரேல் அதிக அளவில் பயன்படுத்திய, தலா 2,000 பவுண்டுகள் எடை கொண்ட 40,000 அதிபயங்கர குண்டுகள் (20,000 எம்கே-84 மற்றும் 20,000 பிஎல்யு-117) இந்த ஆயுதத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.