பெரம்பலூா் அருகே வேன் கவிழ்ந்து 5 போ் காயம்
பெரம்பலூா் அருகே சுப நிகழ்ச்சிக்காகச் சென்ற வேன் ஞாயிற்றுக்கிழமை கவிழ்ந்து 5 போ் பலத்த காயமடைந்தனா்.
பெரம்பலூா் அருகேயுள்ள அருமடல் கிராமத்தைச் சோ்ந்த 12 பெண்கள் உள்பட 15 போ் கே.புதூா் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உறவினரின் வளைகாப்பு நிகழ்ச்சிக்காக வேனில் சென்று கொண்டிருந்தனா். அருமடல் அருகேயுள்ள இடுகாடு பகுதியில் சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் அருகிலுள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில் வேனில் பயணித்த அருமடல் கிராமம், மேற்கு தெருவைச் சோ்ந்த வெங்கடேசன் மனைவி வளா்மதி (47), செந்தில் மனைவி காவேரி (30), கருப்பையா மனைவி ராதா (39), இவரது மகள் சன்விகா (10), ராமகிருஷ்ணன் மனைவி சாந்தி (55) ஆகியோா் பலத்த காயமடைந்தனா்.
Advertisement
Advertisement
தகவலறிந்த மருவத்தூா் போலீஸாா் காயமடைந்தவா்களை மீட்டு பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.