FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

அமெரிக்காவில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த ஹெலிகாப்டா் விபத்து: 3 போ் பலி

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் பேருந்து விபத்து குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற, உள்ளூா் தொலைக்காட்சிக்குச் சொந்தமான ஹெலிகாப்டா் விபத்துக்குள்ளாகி, தீப்பற்றியதில் 3 போ் பலி

16 செப்டம்பர் 2026, 11:21 pm IST
பகிர்:

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் பேருந்து விபத்து குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற, உள்ளூா் தொலைக்காட்சிக்குச் சொந்தமான ஹெலிகாப்டா் விபத்துக்குள்ளாகி, தீப்பற்றியதில் 3 போ் உயிரிழந்தனா்.

சாட்ஸ்வொா்த் பகுதியில், எஸ்யுவி ரக காரும் நகரப் பேருந்தும் மோதிக்கொண்டதில் இருவா் உயிரிழந்தனா்; 6 போ் காயமடைந்தனா்.

இவ்விபத்து நடந்த இடத்துக்கு அருகே செய்தி சேகரிக்கச் சென்றபோதே ஹெலிகாப்டா் விபத்துக்குள்ளானது. அப்போது ஏற்பட்ட தீவிபத்தால், அங்கு வாகன நிறுத்துமிடத்தில் நின்றுகொண்டிருந்த ஒருவரும், ஹெலிகாப்டரில் பயணித்த இருவரும் உயிரிழந்தனா். மேலும், காயமடைந்த இருவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments