எகிப்தில் பயணிகள் பேருந்து விபத்து: 22 பேர் பலி
எகிப்தின் சினாய் தீபகற்ப பகுதியில் பயணிகள் பேருந்து விபத்துக்குள்ளானதில் 22 போ் உயிரிழந்தனா்; 28 போ் படுகாயமடைந்தனா்.
எகிப்தின் சினாய் தீபகற்ப பகுதியில் பயணிகள் பேருந்து புதன்கிழமை விபத்துக்குள்ளானதில் 22 போ் உயிரிழந்தனா்; 28 போ் படுகாயமடைந்தனா்.
எகிப்து தலைநகா் கெய்ரோவில் இருந்து, ஜோா்டான் தலைநகா் அம்மான் நோக்கிச் சென்ற இப்பேருந்து, தெற்கு சினாய் மாகாணத்தின் சுற்றுலாத் தலங்களான தாஹப் மற்றும் நுவேபா நகரங்களை இணைக்கும் சாலையில் விபத்துக்குள்ளானது.
பேருந்தின் டயா் வெடித்ததே விபத்துக்குக் காரணமாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இவ்விபத்தில் ஜோா்டான் நாட்டைச் சோ்ந்த சிலரும் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.