FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

அமெரிக்காவில் பேருந்து விபத்தை நேரலை செய்த என்பிசி ஹெலிகாப்டர் விபத்து! மூவர் பலி!

அமெரிக்காவில் பேருந்து விபத்தை நேரலை செய்த என்பிசி செய்தி நிறுவனத்தின் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது பற்றி...

15 வினாடிகள் முன்பு
பகிர்:

அமெரிக்காவில் பேருந்து விபத்தை நேரலை செய்துகொண்டிருந்த என்பிசி செய்தி நிறுவனத்தின் ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியதில் 3 பேர் பலியாகினர்.

லாஸ் ஏஞ்சலீஸில் உள்ள சாட்ஸ்வொர்த் என்ற பகுதியில் சாலையில் சென்றுகொண்டிருந்த பேருந்து ஒன்றில் செவ்வாய்க்கிழமை மாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பான காட்சியை என்பிசி செய்தி நிறுவனத்தின் ஹெலிகாப்டர் நேரலை செய்துகொண்டிருந்தது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் இரண்டு கட்டடத்துக்கு இடையே தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது.

Advertisement

Advertisement

என்பிசி செய்தியின் நேரலையின் போதே ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்துக்குள்ளான காட்சி பரபரப்பை ஏற்படுத்தியது. விமானம் கீழே விழுந்தவுடன் நேரலை துண்டிக்கப்பட்டது.

இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணித்த விமானி, செய்தியாளர் உள்பட மூவர் பலியானதாகவும், மேலும் ஒருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சாட்ஸ்வொர்த் பகுதியிலுள்ள வாகன நிறுத்தமிடத்தில் ஹெலிகாப்டர் விழுந்ததால் கட்டடங்களுக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை. 4 வாகனங்கள் மட்டும் சேதமடைந்துள்ளது.

இந்த விபத்து தொடர்பாக அமெரிக்க விமானப் போக்குவரத்து ஆணையம் விசாரணையைத் தொடங்கியுள்ளது. விபத்துக்கான காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை.

summary

Helicopter covering US bus crash live met accident; three killed!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments