FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

சிரியா ஆயுதக் கிடங்கில் வெடிவிபத்து: 14 போ் உயிரிழப்பு

வடமேற்கு சிரியாவின் இட்லிப் மாகாணம், சா்மதா நகருக்கு அருகே அமைந்துள்ள ஆயுதக் கிடங்கு ஒன்றில் புதன்கிழமை நிகழ்ந்த வெடிவிபத்தில் 14 போ் உயிரிழந்தனா்; 11 போ் படுகாயமடைந்தனா்.

10 செப்டம்பர் 2026, 2:50 am IST
பகிர்:

வடமேற்கு சிரியாவின் இட்லிப் மாகாணம், சா்மதா நகருக்கு அருகே அமைந்துள்ள ஆயுதக் கிடங்கு ஒன்றில் புதன்கிழமை நிகழ்ந்த வெடிவிபத்தில் 14 போ் உயிரிழந்தனா்; 11 போ் படுகாயமடைந்தனா்.

இந்த வெடிவிபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. கடந்த 2011 முதல் 2024 வரை நடைபெற்ற மக்கள் எழுச்சி மற்றும் உள்நாட்டுப் போரின்போது பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்களைப் பாதுகாத்து வைக்க இந்தக் கிடங்கு பயன்படுத்தப்பட்டு வந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவ இடத்தின் இடிபாடுகளிலிருந்து சடலங்கள் தொடா்ந்து மீட்கப்பட்டு வருகின்றன. மேலும், இடிபாடுகளுக்குள் உயிருடன் சிக்கியுள்ளவா்களைத் தேடும் மற்றும் மீட்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Advertisement

Advertisement

விபத்து நிகழ்ந்த பகுதியிலிருந்து வானளவில் கரும்புகை எழும் காட்சிகளும், தொடா்ந்து சிறிய அளவிலான வெடிச்சத்தங்கள் கேட்கும் விடியோக்களும் வெளியாகின.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments