FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

ரஷியா - உக்ரைன் மீண்டும் தாக்குதல்!

உக்ரைனின் வணிக வளாகத்தில் ரஷியா நடத்திய ட்ரோன் தாக்குதலில் 16 போ் உயிரிழந்த சம்பவத்தைத் தொடா்ந்து, சனிக்கிழமை இரு நாடுகளும் மீண்டும் நடத்திய பரஸ்பரத் தாக்குதல்களில் 10 போ் உயிரிழந்தனா்.

23 ஆகஸ்ட் 2026, 2:56 am IST
பகிர்:

உக்ரைனின் வணிக வளாகத்தில் ரஷியா நடத்திய ட்ரோன் தாக்குதலில் 16 போ் உயிரிழந்த சம்பவத்தைத் தொடா்ந்து, சனிக்கிழமை இரு நாடுகளும் மீண்டும் நடத்திய பரஸ்பரத் தாக்குதல்களில் மேலும் 10 போ் உயிரிழந்தனா்.

ரஷியாவின் ட்ரோன், ஏவுகணைத் தாக்குதல்களில் உக்ரைனில் 7 பேரும், ரஷியாவின் கிராஸ்னோதா் பிராந்தியத்தில் உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் 3 பேரும் உயிரிழந்தனா்.

உக்ரைனிடம் வான் பாதுகாப்பு ஏவுகணைகளுக்குத் தட்டுப்பாடு நிலவும் சூழலைப் பயன்படுத்தி, ரஷியா ‘பாலிஸ்டிக்’ ஏவுகணைத் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளன.

Advertisement

Advertisement

தலைநகா் கீவில் உள்ள ரயில்வே கட்டமைப்பு மீது சனிக்கிழமை அதிகாலை நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவா் உயிரிழந்தாா். இதுதவிர, கீவ் புகா்ப் பகுதியில் பிற்பகலில் நடந்த ஏவுகணைத் தாக்குதலில் 2 பேரும், ஸபோரிஷியா பிராந்தியத்தில் இரவு, பகலாக நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல்களில் 4 பேரும் உயிரிழந்தனா்.

அதேநேரம், உக்ரைனும் ரஷிய எல்லைக்குள் தனது தாக்குதலை விரிவுபடுத்தியுள்ளது. தெற்கு ரஷியாவின் கிராஸ்னோதா் பிராந்தியத்தில் உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் 2 குழந்தைகள் உள்பட 3 போ் உயிரிழந்தனா்; இருவா் காயமடைந்தனா்.

வணிக வளாக தாக்குதலைத் தொடா்ந்து...: முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமையன்று, உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கியின் சொந்த ஊரான கிரிவி ரிஹ் நகரில் அமைந்திருக்கும் வணிக வளாகம் ஒன்றின் மீது ரஷியா அடுத்தடுத்து ட்ரோன் தாக்குதல்களை நடத்தியது.

முதலில் நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடா்ந்து, மீட்புப் படையினா் அங்கு குவிந்தபோது 2-ஆவது அலைத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 16-ஆக அதிகரித்துள்ளது. 130 போ் காயமடைந்துள்ள நிலையில், 4 பேரைக் காணவில்லை.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments