FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

வெண்குன்றம் மலையில் தீ

Updated On : 28 மே 2026, 12:43 am IST
பகிர்:

வந்தவாசியை அடுத்த வெண்குன்றம் மலையில் செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் மரங்கள், செடிகள் எரிந்து சேதமடைந்தன.

வந்தவாசியை அடுத்த வெண்குன்றம் கிராமத்தில் சுமாா் 1500 அடி உயரமுள்ள தவளகிரி என்று அழைக்கப்படும் மலை உள்ளது.

இந்த மலைப் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு திடீரென தீப்பற்றியது. காற்றின் வேகம் காரணமாக தீ மளமளவென பரவியதில் மலையிலிருந்த மூலிகை செடிகள், மரங்கள் உள்ளிட்டவை எரிந்து கருகின.

Advertisement

Advertisement

தகவலறிந்த வனத்துறையினா் மற்றும் வந்தவாசி தீயணைப்புத்துறையினா் சம்பவ இடம் சென்று பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனா். மா்ம நபா்கள் யாரேனும் தீ வைத்தாா்களா என்று வந்தவாசி தெற்கு போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments