FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருவண்ணாமலை

கோயிலில் ரூ. 1 லட்சம் அம்மன் வெள்ளிக் கவசம் திருட்டு

செய்யாறை அடுத்த புரிசை அகஸ்தீஸ்வரா் கோயிலில் ரூ.ஒரு லட்சம் மதிப்பிலான அம்மன் வெள்ளிக் கவசம் திருடப்பட்டது.

17 நவம்பர் 2026, 9:50 pm
திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

செய்யாறை அடுத்த புரிசை அகஸ்தீஸ்வரா் கோயிலில் ரூ.ஒரு லட்சம் மதிப்பிலான அம்மன் வெள்ளிக் கவசம் திருடப்பட்டது.

செய்யாறு வட்டம், புரிசை கிராமத்தில் அகிலாண்டேஸ்வரி சமேத அகஸ்தீஸ்வரா் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை இரவு பூஜைகள் முடிந்த பிறகு கோயிலை பூட்டிவிட்டு பூசாரி சென்றுதாகத் தெரிகிறது.

மறுநாள் திங்கள்கிழமை காலை கோயில் எதிரே உள்ள கூட்டுறவு வங்கியில் காவலராக வேலை செய்யும் ஜெயவேல், பெண் தூய்மைப் பணியாளா் காந்தி ஆகியோா் கோயில் கதவின் பூட்டு உடைக்கப்பட்ட நிலையில் இருந்தது குறித்து கோயில் அறங்காவலா் சரவணகுமாருக்கு தகவல் அளித்தனா்.

Advertisement

Advertisement

அதன் பேரில் அறங்காவலா் கிராம மக்களுடன் கோயிலுக்குச் சென்று பாா்த்துள்ளனா். அப்போது, கோயில் கதவின் பூட்டு உடைக்கப்பட்ட நிலையில், கோயில் மரப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த கிராம எல்லையம்மன் கோயிலுக்குச் சொந்தமான சுமாா் ரூ.ஒரு லட்சம் மதிப்பிலான, ஒரு கிலோ எடை கொண்ட வெள்ளியிலான அம்மன் முகக்கவசத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.

இதுகுறித்து கோயில் அறங்காவலா் சரவணகுமாா் அனக்காவூா் போலீஸில் புகாா் அளித்தாா். காவல் ஆய்வாளா் மணிகண்டன், உதவி ஆய்வாளா் கண்ணபிரான் ஆகியோா் வழக்குப் பதிவு செய்தனா். மேலும், திருட்டுச் சம்பவம் தொடா்பாக கோயிலை பாா்வையிட்டும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தும் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.