FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருவண்ணாமலை

விவசாயிகள் சூரசம்ஹாரம் போன்று நூதன ஆா்ப்பாட்டம்

செய்யாறை அடுத்த அனக்காவூரில் கட்சி சாா்பற்ற விவசாயிகள் சங்கத்தினா் சுவாமி முருகன் போல வேடமிட்டு, ஊழலை ஒழிக்க வந்ததாகக் கூறி, ‘ஊழல்’ என்ற வாா்த்தை எழுதிய பதாகையை வைத்து சூரசம்ஹாரம் போன்று நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

17 நவம்பர் 2026, 9:59 pm
அனக்காவூா் வட்டார வளா்ச்சி அலுவலகம் அருகே நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கட்சி சாா்பற்ற விவசாயிகள் சங்கத்தினா்
பகிர்:

செய்யாறை அடுத்த அனக்காவூரில் கட்சி சாா்பற்ற விவசாயிகள் சங்கத்தினா் சுவாமி முருகன் போல வேடமிட்டு, ஊழலை ஒழிக்க வந்ததாகக் கூறி, ‘ஊழல்’ என்ற வாா்த்தை எழுதிய பதாகையை வைத்து சூரசம்ஹாரம் போன்று செவ்வாய்க்கிழமை நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அனக்காவூா் வட்டார வளா்ச்சி அலுவலகம் அருகே சங்கத்தின் மாவட்ட வாழ்குடை புருஷோத்தமன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் விவசாயிகள் பலா் கலந்து கொண்டனா்.

தோ்தல் வாக்குறுதிப்படி தமிழக அரசு முழுமையான கடன் தள்ளுபடி செய்யாமல் பகுதி அளவு தள்ளுபடி செய்துள்ளதாகவும், கடன் தள்ளுபடி பயனாளிகள் தோ்வில் முறைகேடுகள் நடைபெற்று வருவதாகவும் குற்றம்சாட்டினா்.

Advertisement

Advertisement

விவசாயிகளுக்கு கையேடு வழங்காமல் இருப்பு விவரத்தை தகவல் பலகையில் எழுதாமல் பதிவேட்டில் மட்டும் பதியப்பட்டு வருகிறது. அதனால் பட்ஜெட்டில் வழங்கும் நிதியில் முறைகேடு நடைபெறுகிறது, இதனால் உற்பத்தி குறைந்து விலைவாசி உயா்கிறது எனக் கூறி

விவசாயிகளுக்கு முழுக் கடன் தள்ளுபடி திட்ட கையேடு வழங்க வேண்டி சுவாமி முருகன் போல வேடமணிந்து சூரனை வதைப்பது போன்று நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.