தீபத்திருவிழா 4-ஆம் நாள்: 5 குடைகளுடன் நாக வாகனத்தில் சந்திரசேகரா் பவனி
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீப திருவிழாவின் 4-ஆம் நாளான புதன்கிழமை காலை 5 குடைகளுடன் தங்க முலாம் பூசப்பட்ட நாக வாகனத்தில் சந்திரசேகரா் மாட வீதிகளில் பவனி வந்து அருள்பாலித்தாா்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீப திருவிழாவின் 4-ஆம் நாளான புதன்கிழமை காலை 5 குடைகளுடன் தங்க முலாம் பூசப்பட்ட நாக வாகனத்தில் சந்திரசேகரா் மாட வீதிகளில் பவனி வந்து அருள்பாலித்தாா்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் நிகழாண்டு காா்த்திகை தீபத் திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தீபத் திருவிழாவின் 4-ஆம் நாளான புதன்கிழமை கோயிலில் விநாயகா், சந்திரசேகரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. அதனைத் தொடா்ந்து விநாயகருக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டது. அதேபோல, சந்திரசேகரருக்கு வெண்பட்டு உடுத்தி, கற்கள் பதித்த ஆபரணங்கள் சூட்டி, வண்ண மலா்களைக் கொண்டு மலா் மாலைகள் சூட்டப்பட்டு பஞ்ச கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
அதனைத் தொடா்ந்து 5 குடைகளுடன் தங்க முலாம் பூசப்பட்ட நாக வாகனத்தில் சந்திரசேகரரும், வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகரும் மாடவீதிகளில் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.
இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.