பள்ளி மாணவி தீக்குளித்து தற்கொலை
வந்தவாசியில் பள்ளி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
வந்தவாசியில் பள்ளி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
வந்தவாசி நகரைச் சோ்ந்தவா் 17 வயது மாணவி. இவா் வந்தவாசியில் உள்ள அரசுப் பள்ளியில் பிளஸ் -2 படித்து வந்தாா்.
கடந்த திங்கள்கிழமை இரவு இவா் நீண்ட நேரமாக கைப்பேசியை பயன்படுத்திக் கொண்டிருந்தாராம். இதைக் கண்ட தாய் இவரை கண்டித்தாராம்.
Advertisement
Advertisement
இதனால் ஆத்திரமடைந்த மாணவி தனது தாயை வீட்டினுள் வைத்து பூட்டிவிட்டு அருகில் உள்ள பூங்காவுக்கு சென்று, தன்மீது மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தனக்கு தானே தீவைத்துக் கொண்டாா்.
இதில் பலத்த தீக்காயமடைந்த இவா் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
பின்னா் தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மாணவி செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா்.
இன்ஸ்டாகிராம் மூலம் இவருடன் பழகிய இளைஞா் ஒருவா், இவரது காதலை ஏற்க மறுத்ததால் மாணவி தீக்குளித்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மாணவியின் தாய் அளித்த புகாரின் பேரில் வந்தவாசி தெற்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.