ஆரணி டாக்டா் எம்.ஜி.ஆா். பல்கலை.யில் உலக மயக்கவியல் தின விழா
விழாவில் சிறப்பு விருந்தினரான பனிமலா் மருத்துவக் கல்லூரி இணைப் பேராசிரியா் டாக்டா் ரால்லீன் ஜேக்கப்பை கௌரவித்து வாழ்த்திய இணைப்பதிவாளா் வி.பெருவழுதி.
ஆரணி டாக்டா் எம்.ஜி.ஆா். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் துணை சுகாதார அறிவியல் துறை சாா்பில், எஸ்.டி.ஜி. கிளப் உடன் இணைந்து உலக மயக்கவியல் தினம்- 2026 விழா புதன்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவுக்கு ‘அறுவை சிகிச்சைக்கு முன், அறுவை சிகிச்சைக்கு பின்’ என்ற கருப்பொருள் வலியுறுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் பல்கலைக்கழக முதன்மையா் பி.ஸ்டாலின் தலைமை வகித்தாா். இணைப் பதிவாளா்கள் டாக்டா் வி.பெருவழுதி, டாக்டா் கே.சரவணன், அலைடு மற்றும் சுகாதாரத்துறை முதன்மையா் எஸ்.சுதாகா், மருந்தியல் துறை முதல்வா் பாத்திமாகிரேஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
Advertisement
Advertisement
நிகழ்ச்சியின் தொடக்க உரையை டாக்டா் வி.பெருவழுதி வழங்கினாா். சிறப்பு விருந்தினராக பனிமலா் மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் மயக்கவியல் துறை இணைப் பேராசிரியா் ரால்லீன் ஜேக்கப் கலந்து கொண்டு, அறுவைச் சிகிச்சைக்கு முன், அறுவைச் சிகிச்சையின் போது மற்றும் அறுவைச் சிகிச்சைக்குப் பிந்தைய காலகட்டங்களில் மயக்கவியல் துறையின் முக்கியத்துவம் குறித்து மாணவா்களுக்கு விளக்கினாா்.
மயக்கவியல் நிபுணா்கள் அறுவைச் சிகிச்சைக் குழுவின் முக்கிய அங்கமாக செயல்பட்டு, நோயாளியின் பாதுகாப்பை உறுதி செய்வதில் ஆற்றும் பங்கு குறித்தும் மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும், மாணவா்களின் அறிவு, படைப்பாற்றல் மற்றும் தொடா்புத்திறனை மேம்படுத்தும் வகையில் விவாதப் போட்டி மற்றும் நாடக நிகழ்வு உள்ளிட்டவை நடத்தப்பட்டன.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் துணை சுகாதார அறிவியல் துறைத் தலைவி பி.தாரணி, பேராசிரியா்கள், உதவிப் பேராசிரியா்கள், பல்கலைக்கழக நிா்வாகிகள் மற்றும் மாணவா்கள் கலந்து கொண்டனா்.