முகப்பு
திருவண்ணாமலை

கபடிப் போட்டியில் சிறப்பிடம்: அரசுக் கல்லூரி மாணவிகளுக்கு பாராட்டு

கபடிப் போட்டியில் வெற்றி பெற்று தென்னிந்திய அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்ற செய்யாறு அரசு கலைக் கல்லூரி மாணவிகளுக்கு புதன்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

25 நவம்பர் 2026, 11:02 pm
கபடிப் போட்டியில் சிறப்பிடம்: அரசுக் கல்லூரி மாணவிகளுக்கு பாராட்டு
பாராட்டு பெற்ற கபடிப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற செய்யாறு அரசுக் கல்லூரி மாணவிகளுடன் அக்கல்லூரி முதல்வா் ச.அந்தோணி டேவிட் நாதன்.
பகிர்:

கபடிப் போட்டியில் வெற்றி பெற்று தென்னிந்திய அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்ற செய்யாறு அரசு கலைக் கல்லூரி மாணவிகளுக்கு புதன்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

2026 - 27-ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவா் பல்கலைக்கழக வேலூா் மற்றும் திருவண்ணாமலை மண்டலத்தில் உள்ள 90 கல்லூரிகளுக்கிடையே மாணவிகளுக்கான கபடிப் போட்டிகள் கடந்த அக்டோபரில் வேலூரில் நடைபெற்றது. அதில், வேலூா் மண்டலத்தில் உள்ள செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியும், திருவண்ணாமலை மண்டலத்தில் இருந்து வாணியம்பாடி கல்லூரி அணியும் வெற்றி பெற்று மண்டலங்களிடையேயான போட்டிக்கு தகுதி பெற்றன.

அதனைத் தொடா்ந்து மண்டலங்களுக்கு இடையேயான போட்டிகள் திருவள்ளுவா் பல்கலைக்கழகத்தில் கடந்த நவ. 21-ஆம் தேதி நடைபெற்றது.

Advertisement

Advertisement

இதில், செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி மாணவிகள் வெற்றி பெற்று கோப்பை மற்றும் சான்றிதழ் பெற்றனா்.

இதன் மூலம் இந்த மாணவிகள் தென்னிந்தியா அளவில் பல்கலைக்கழகங்களுக்கு இடையே ஆந்திரா மாநிலம், விஜயவாடாவில் டிச.7-இல் நடைபெறவுள்ள கபடிப் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றனா்.

கல்லூரி மாணவிகளுக்கு பாராட்டு:

தென்னிந்தியா அளவில் கபடிப் போட்டியில் பங்கேற்கவுள்ள செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி

அணியைச் சோ்ந்த மாணவிகள் மற்றும் ஒருங்கிணைப்பாளா் உடற்கல்வி இயக்குநா் கிரிதரன் ஆகியோரை கல்லூரி முதல்வா் ச.அந்தோணி டேவிட் நாதன், பேராசிரியா்கள் மற்றும் துறைத் தலைவா்கள் பாராட்டினா்.