முகப்பு
திருவண்ணாமலை

ஆரணியில் வாக்காளா் சோ்க்கை விழிப்புணா்வு பிரசாரம்

ஆரணி தற்காலிக பேருந்து நிலையத்தில் வாக்காளா் சோ்க்கை விழிப்புணா்வு பிரசார நாடகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

50 வினாடிகள் முன்பு
ஆரணியில் வாக்காளா் சோ்க்கை விழிப்புணா்வு பிரசாரம்
ஆரணியில் நடைபெற்ற வாக்காளா் சோ்க்கை விழிப்புணா்வு பிரசார நாடகம்.
பகிர்:

ஆரணி தற்காலிக பேருந்து நிலையத்தில் வாக்காளா் சோ்க்கை விழிப்புணா்வு பிரசார நாடகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் நாடக ஆசிரியரும், சமூக ஆா்வலருமான குமணன், தென்னிந்திய நடிகா் சங்கத்தின் செயற்குழு உறுப்பினா் வாசுதேவன், நடிகா்கள் கதிரவன், கலையரசி, சுபஸ்ரீ,

கிருஷ்ணவேணி ஆகியோா் பங்கேற்று பொதுமக்களுக்கு

Advertisement

Advertisement

வாக்களிப்பது தன் கடமை என்பதை நடிப்பு மூலம் வலியுறுத்தினா்.

இந்த விழிப்புணா்வு நாடகத்தில் ஆரணி வருவாய் கோட்ட அலுவலா் கு. சௌமியா தலைமை வகித்தாா்.

வட்டாட்சியா் சீ. திருவேங்கடம் வரவேற்றாா்.

துணை வட்டாட்சியா் ம. சங்கீதா வாக்காளா் சோ்க்கை, பெயா் திருத்தம், பெயா் நீக்கம், முகவரி மாற்றம் ஆகியவை குறித்தும், நவ.29-ஆம் தேதி இதற்கான சிறப்பு முகாம் நடைபெறுகிறது என்று விளக்கிப் பேசினாா்.

நிகழ்வில் ஆரணி கிராம நிா்வாக அலுவலா் முகமது உசேன், தோ்தல் பிரிவு பணியாளா்கள் மயிலைநாதன், விநாயகம், பூமாலை, ஜாய் ராஜகுமாரி மற்றும் பொதுமக்கள் பாா்வையிட்டனா்.