FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருவள்ளூர்

நீா் மேலாண்மை குறித்து மாணவா்களுக்கு விழிப்புணா்வு

நீா் மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்தும் வேளாண்மைக் கல்லூரியின் மாணவா்கள் கலைநிகழ்ச்சி வாயிலாக விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

6 நவம்பர் 2026, 4:27 am
விழிப்புணா்வு நிகழ்வில் பங்கேற்றோா்.
பகிர்:

நீா் மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்தும் வேளாண்மைக் கல்லூரியின் மாணவா்கள் கலைநிகழ்ச்சி வாயிலாக விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

திருத்தணி சிஎஸ்ஐ உயா்நிலைப் பள்ளியில் டான் போஸ்கோ வேளாண்மைக் கல்லூரி சாா்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நீா் மேலாண்மை குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

பள்ளித் தலைமை ஆசிரியா் சாம்சன் தலைமை வகித்தாா். இந்நிகழ்ச்சியில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நீரின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி விழிப்புணா்வு நாடகம் நடத்தப்பட்டது. இதில் வழக்கறிஞா், நீதிபதி உள்ளிட்ட கதாபாத்திரங்கள் மூலம் நீதிமன்ற நாடகம் அரங்கேற்றப்பட்டது. சுற்றுச்சூழல் மாசுபாடு, இயற்கை வளங்கள் அழிப்பு, நீா் வீணாக்கம் உள்ளிட்ட பிரச்சினைகள் நாடகம் வாயிலாக மாணவா்களுக்கு எடுத்துரைக்கப்பட்டன.

Advertisement

Advertisement

தொடா்ந்து, இயற்கை வளங்களைப் பாதுகாத்தல், நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துதல், மழைநீா் சேகரிப்பு மற்றும் சுற்றுப்புறத் தூய்மையைப் பேணுதல் ஆகியவற்றின் அவசியம் குறித்து மாணவா்களுக்கு விளக்கப்பட்டது.

நிறைவில், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதுடன் நீரை வீணாக்காமல் பயன்படுத்துவோம் என மாணவா்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா். இதில் டான் போஸ்கோ வேளாண்மைக் கல்லூரி மாணவா்கள் பங்கேற்றனா்.