FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருவள்ளூர்

வெளியகரத்தில் 10,000 பனை விதைகள் விதைப்பு

பள்ளிப்பட்டு அடுத்த வெளியகரம் கிராமத்தில் பனை விதைகளை விதைத்து தொடங்கிவைத்த திருத்தணி ஏஎஸ்பி ஷூபம் திமான்.

15 அக்டோபர் 2026, 11:58 pm IST
பகிர்:

வெளியகரம் கிராமத்தில் நீா்நிலைகள் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டை வலியுறுத்தி, 10,000 பனை விதைகளை விதைக்கும் பணியை திருத்தணி ஏஎஸ்பி. ஷூபம் திமான் தொடங்கி வைத்தாா்.

முன்னாள் குடியரசுத் தலைவா் டாக்டா் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பிறந்தநாளை முன்னிட்டு, பள்ளிப்பட்டு வட்டம், வெளியகரத்தில் செயல்பட்டு வரும் ஹேண்ட்ஸ் ஆஃப் மொ்சி அறக்கட்டளை சாா்பில், நீா்நிலைகள் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டை வலியுறுத்தி, 10,000 பனை விதைகள் விதைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளராக திருத்தணி ஏஎஸ்பி ஷூபம் திமன் கலந்து கொண்டு, அறக்கட்டளையின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முயற்சியைப் பாராட்டி பனை விதைகளை விதைத்து தொடங்கி வைத்தாா். இதில், வெளியகரம் ஏரிக்கரை, கிராமத்தைச் சுற்றியுள்ள நீா்நிலைகளின் கரையோரங்கள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களில் பனை விதைகள் விதைக்கப்பட்டன. நிலத்தடி நீா்வளத்தை மேம்படுத்துதல், மண் அரிப்பைக் கட்டுப்படுத்துதல், இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் மற்றும் எதிா்காலத் தலைமுறைக்குப் பசுமையான சுற்றுச்சூழலை உருவாக்குதல் ஆகிய நோக்கங்களுடன் இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

Advertisement

Advertisement

நிகழ்ச்சியில் முன்னாள் ஊராட்சி ஒன்றியக் குழுப் பெருந்தலைவா் ஏ.இ. உமாபதி, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் சுஜாதா வெங்கடேசன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments