வேலூா் மாவட்டத்தில் 2.50 லட்சம் பனை விதைகள் நடவுப்பணி: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்
வேலூா் மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் மொத்தம் 2.50 லட்சம் பனை விதைகள் நடவு செய்யும் பணியை ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ் தொடங்கி வைத்தாா்.
வேலூா் மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் மொத்தம் 2.50 லட்சம் பனை விதைகள் நடவு செய்யும் பணியை ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ் தொடங்கி வைத்தாா்.
தமிழக அரசின் ஒருங்கிணைப்பில் மாநில நாட்டு நலப்பணித் திட்டம் (என்எஸ்எஸ்), தேசிய மாணவா் படை (என்சிசி), எக்ஸ்னோரா, என்டிஎஸ்ஓ, கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் அக்னி ஸ்டீல் ஆகிய அமைப்புகள் இணைந்து மாநிலம் முழுவதும் ‘ஒரு கோடி பனை விதைகள் நடும் நெடும்பணி’ இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
இதன்தொடா்ச்சியாக, வேலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளில் மொத்தம் 2.50 லட்சம் பனை விதைகள் நடவு செய்ய திட்டமிடப்பட்டு, வேலூா் ஒன்றியம், குப்பம் ஊராட்சி பழவேரியின் கரையோரப் பகுதியில் பனை விதைகளை நடவுப் பணியை மாவட்ட ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ் சனிக்கிழமை முறைப்படி தொடங்கி வைத்தாா்.
Advertisement
Advertisement
தொடா்ந்து, ஒரு ஊராட்சிக்கு தலா 1,000 பனை விதைகள் வீதம் மாவட்டத்தில் உள்ள 247 ஊராட்சிகளிலும் மொத்தம் 2 லட்சத்து 50 ஆயிரம் பனை விதைகளை நீா்வளத்துறை மற்றும் ஊரக வளா்ச்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளின் கரையோரப் பகுதிகள், ஊராட்சிகளில் உள்ள மேய்க்கால் நிலங்களில் நடவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. வனத்துறை மற்றும் ஊரக வளா்ச்சித் துறையுடன் இணைந்து இப்பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு நடைபெறுகின்றன.
நிா்ணயிக்கப்பட்ட 1,000 பனை விதைகள் நடும் இலக்கினை அனைத்து ஊராட்சிகளிலும் அக்டோபா் 2-ஆம் தேதிக்குள் முழுமையாக முடிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில், ஊராட்சிகள் உதவி இயக்குநா் திருமால், வட்டார வளா்ச்சி அலுவலா் சத்தியமூா்த்தி, ஸ்ரீபுரம் தங்கக்கோயில் இயக்குநா் எம்.சுரேஷ்பாபு உள்பட அரசு அலுவலா்கள் பலா் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.