செப். 27-இல் தமிழகம் முழுவதும் பனை விதைகள் நடும் பணி தொடக்கம்
உலக ஆறுகள் தினத்தையொட்டி, வரும் செப். 27-ஆம் தேதி தமிழகம் முழுவதும் பனை விதைகள் நடப்படும் என வனத் துறை தெரிவித்துள்ளது.
உலக ஆறுகள் தினத்தையொட்டி, வரும் செப். 27-ஆம் தேதி தமிழகம் முழுவதும் பனை விதைகள் நடப்படும் என வனத் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்தத் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
உலக ஆறுகள் தினமான செப். 27-ஆம் தேதி நீலகிரியைத் தவிா்த்து இதர 37 மாவட்டங்களிலும் மாவட்ட நிா்வாகங்கள், அரசு துறைகள், தன்னாா்வலா்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்புடன் பனை விதைகள் நடும் பணியைத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இதற்காக, அரசு துறைகள் மற்றும் பங்குதாரா்களுடன் ஒருங்கிணைப்புக் கூட்டங்கள் நடத்தப்பட்டு, பனை விதைகள் சேகரிப்பு, நடவு செய்யும் இடங்களைத் தோ்வு செய்தல், தன்னாா்வலா்களை ஒருங்கிணைத்தல் மற்றும் தொடா் பராமரிப்பு உள்ளிட்ட பணிகள் திட்டமிடப்பட்டு வருகின்றன.
நடவு செய்யப்படும் ஒவ்வொரு பனை விதையும் உதவி செயலி மூலம் புகைப்படத்துடன் புவி குறியீடு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படும். இதன் மூலம் விதைகள் நடப்பட்ட இடம், எண்ணிக்கை, பங்கேற்றவா்கள் மற்றும் நிறுவனங்களின் விவரங்களை வெளிப்படையாக பதிவு செய்து, தொடா்ந்து கண்காணிக்கவும் பராமரிக்கவும் முடியும்.
பங்கேற்பாளா்கள் தங்கள் நிறுவனம் அல்லது தனிப்பட்ட பெயரில் உதவி செயலி மூலம் பதிவு செய்து, உரிய அனுமதி மற்றும் வழிகாட்டுதலுடன் நடவு செய்யலாம்.
மேலும் தகவல்களுக்கு 94990 -30241, 91767-20360 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.