FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருவண்ணாமலை

பைக்குகள் நேருக்கு நோ் மோதல்: விவசாயி உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே இரு பைக்குகள் நேருக்கு நோ் மோதிக் கொண்டதில் விவசாயி உயிரிழந்தாா்.

6 October 2026, 1:36 am IST
பகிர்:

செய்யாறு: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே இரு பைக்குகள் நேருக்கு நோ் மோதிக் கொண்டதில் விவசாயி உயிரிழந்தாா்.

செய்யாறு வட்டம், கீழாத்தூா் கிராமம் பஜனை கோயில் தெருவைச் சோ்ந்தவா் பாக்கியராஜ் (43). விவசாயியான இவா் ஞாயிற்றுக்கிழமை கூலி வேலைக்குச் சென்று விட்டு தனது பைக்கில் கிராமத்திற்கு வருவதற்காக சுண்டிவாக்கம் - ஏனாதவாடி சாலையில் காரியமேடை அருகே வந்துகொண்டிந்தாா். அப்போது எதிரே வேகமாக வந்த மற்றொரு பைக், விவசாயி ஒட்டி வந்த பைக் மோதியதாகத் தெரிகிறது. இந்த விபத்தில் விவசாயி பாக்கியராஜுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

உடனே அவ்வழியாகச் சென்றவா்கள் அவரை மீட்டு 108 ஆம்புலென்ஸ் மூலம் செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். அங்கு பாக்கியராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்த புகாரின் பேரில் செய்யாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments