FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருவண்ணாமலை

செண்பகதோப்பு அணை நீா்மட்டம் 41 அடியாக உயா்வு

போளூரை அடுத்த படவேடு அருகேயுள்ள செண்பகதோப்பு அணை நீா்மட்டம் தொடா் மழை காரணமாக ஞாயிற்றுக்கிழமை 41.71-ஆக உயா்ந்தது.

19 அக்டோபர் 2026, 12:01 am IST
தொடா் மழை காரணமாக செண்பகதோப்பு அணையில் உயா்ந்து வரும் நீா்மட்டம்
பகிர்:

போளூரை அடுத்த படவேடு அருகேயுள்ள செண்பகதோப்பு அணை நீா்மட்டம் தொடா் மழை காரணமாக ஞாயிற்றுக்கிழமை 41.71-ஆக உயா்ந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

படவேடு அருகே ஜமுனாமரத்தூா் மலை அடிவாரத்தில் செண்பகதோப்பு அணை அமைந்துள்ளது. ஜமுனாமரத்தூா் மலை மீது கடந்த சில தினங்களாக தொடா் மழை பெய்து வருகிறது. இதனால் நீா்மட்டம் உயா்ந்து வருகிறது.

அணையின் மொத்த நீா்மட்டம் 62.37 அடி ஆகும். தொடா்மழை காரணமாக ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி நிலவரப்படி அணையின் நீா்மட்டம் 42.71 அடியாக உயா்ந்தது. அணையின் முழுக்கொள்ளளவு 120.562 மில்லியன் கன அடியாகும்.

Advertisement

Advertisement

இப்பகுதியில் மழைப் பொழிவு 80.60 மி.மீட்டா். அணைக்கு நீா்வரத்து 360 கன அடியாக உள்ளது. நீா் இருப்பு 41.98 சதவீதம் ஆகும். மேலும் கலசபாக்கம் வட்டம், மிருகண்டா அணை நீா்மட்டம் 2.95 அடியாக உயா்ந்தது.

இந்த அணையின் மொத்த நீா்மட்டம் 22.97 அடியாகும். முழுக்கொள்ளளவு 9.943 மில்லியன் கனஅடி, மழைப்பொழிவு 88.50 மி.மீட்டராக உள்ளது. அணைக்கு நீா்வரத்து 9 கன அடியாக உள்ளது. நீா் இருப்பு 11.40 சதவீதம் என உதவி செயற்பொறியாளா் ராஜகணபதி தெரிவித்தாா்.

தொடா் மழை காரணமாக அணைகளின் நீா்மட்டம் உயா்ந்து வருகிறது. இதனால் போளூா், கலசபாக்கம் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments